Cinema Entertainment

மகாராஜா படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் இவர் தானாம் ?

தமிழ்நாட்டில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இன்னொரு நடிகர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாறுதலால் அவருக்கு அந்த படம் கிடைக்கவில்லை.

இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படத்திலும் தன்னால் முடிந்த வரை வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருபவர் விஜய் சேதுபதி. பேச்சுலர், போலீஸ், தாதா, லவ்வர் பாய், டாக்டர், பத்திரிக்கையாளர் என ஏராளமான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.




சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் திருநங்கையாக நடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது 50 ஆவது திரைப்படமாக மகாராஜா கடந்த வாரம் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இந்த படத்தில் அவருடன் ஹிந்தி சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுராக் கஷ்யப், நட்டி, சிங்கம் புலி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மிகவும் சாதாரண கதையை தனது திறமையான திரைக்கதை வடிவமைப்பால் இயக்குனர் நித்திலன் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார். இந்த படத்திற்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் இந்த படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

இந்த நிலையில் மகாராஜா படம் குறித்த மேலும் சில சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலில் இந்த படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி தான் சரியான தேர்வாக இருக்கும் என்று இயக்குனரும், படத்தில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களும் கருதினார்களாம். ஆனால் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டூடியோ உடன், இயக்குனர் நித்திலன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த படம் விஜய் சேதுபதி கைக்கு சென்றுள்ளது.

இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வாசிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் நல்ல வாய்ப்பு விஜய் ஆண்டனிக்கு தவறி விட்டதாக கூறியுள்ளனர். இன்னும் சிலர் விஜய் ஆண்டனியை விடவும் விஜய் சேதுபதி தான் சரியான தேர்வு என்றும் அவரால் சாதாரண படங்களை கூட தனது நடிப்பால் உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!