Cinema Entertainment

மகாராஜா படத்தின் முதல் நாள் வசூல்? – வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து மிகப்பெரிய கதாநாயகன் என்ற அந்தஸ்தை அடைந்துள்ள விஜய் சேதுபதி, வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து, கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். பெரும்பாலான ஹீரோக்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கத் தயங்கும் சூழலில், விஜய் சேதுபதி எல்லாவிதமாக கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். தற்போது விஜய் சேதுபதி மகாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், விஜய் சேதுபதியின் 50வது படமாகும்.




மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன் தாஸ், அனுராக் காஷ்யப் என பலரும் நடித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பல நாடுகளிலும் மகாராஜா படத்திற்கான புரமோஷன் பணிகளை முழுவீச்சில் நடத்தியது படக்குழு, துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் மகாராஜா திரைப்படத்தின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News18

இந்த படம் ஜூன் 14 ஆம் தேதி உலகம் முழுவதும்   1915 ஸ்க்ரீன்களில் வெளியானது. படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் குறித்து பலரும் பாசிட்டிவான ரெவ்யூக்களை கொடுத்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தள பக்கங்களிலும் மகாராஜா படத்தின் ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் படம் வெளியாகி முதல் நாள் செய்த வசூல் எவ்வளவு என்று தெரியுமா?

இந்த படம் செய்த முதல் நாள் வசூல் ரூ.8 கோடியில் இருந்து ரூ.9 கோடி வரை இருக்கும், இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், விஜய் சேதுபதியின் மகாராஜா எந்த போட்டியுமின்றி ரேஸில் முதலில் உள்ளது என்றே கூறலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!