gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/விதுரரின் சிந்தனைகள்

மகாபாரதத்தில் விதுரர் மதிநுட்பம் மிகுந்த அமைச்சராக தனது அண்ண‍ன் திருதராஷ்டர‌ரின் அவையில் இருந்தவரும் பீஷ்மரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாவார். அத்தகைய பெருமை மிக்க விதுரர் 15 வகையான மூடர்களை பட்டியலிடுகிறார்.

  • தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சியடைபவன்.

  • தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்ப‍வன்.

  • பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்ப‍வன்.

  • உயர்ந்த குடும்பத்தில் பிறந்து முறையற்ற செயலை செய்பவன்.

  • தானத்தைக் கேட்கக்கூடாதவனிடம் கேட்பவன்.




  • எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து தற்பெருமை பேசுபவன்.

  • பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம் பொருளைக் கொண்டு பிழைப்பவன்.

  • பலமில்லாத‌வனாக இருந்துகொண்டு பலமுள்ள‍வனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.

  • பிறரிடம் இருந்து உதவியோ அல்ல‍து பொருளையோ பெற்றுக்கொண்டு பின் அது தனது நினைவில் இல்லையே என்று சொல்பவன்.

  • தனது மனைவியைக் குறித்து பிறரிடம் தவறாகப் பேசுபவன்.

  • அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.

  • தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.

  • புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு வீட்டிற்கு வந்து அதை தானே சொல்லித்தற்பெருமை பேசுபவன்.

  • எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!