gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/ அர்ஜுனனின் வனவாச காலம்

அர்ஜுனன் தனது வனவாச காலத்தின் போது, சித்திராங்கதையிடம் இருந்து விடைபெற்று சென்று புண்ணிய நீர்நிலையான தெற்கு கடற்கரைக்கு சென்றார்.

🌊ஆனால் அங்கே அந்த ஐந்து நீர்நிலைகளான அகஸ்தியம், சௌபத்ரம், கரந்தமம், பரத்வாஜம், பௌலோமம் ஐந்து புண்ணிய நீர் நிலைகளைளும் அனைவராலும் தவிர்க்கப்பட்டிருப்பதை  கண்டார்.

🌊இதற்கான காரணத்தை துறவிகளிடம் வினவிய போது அவர்கள் அங்கே ஐந்து பெரும் முதலைகள்  வசிப்பதாகவும், அவை குளிக்க செல்பவர்களை இழுத்துச் சென்று விடுகின்றன என்றும் கூறினார்கள்.

காண்டீபதாரி அர்ஜுனன்

🌊 துறவிகளின் இந்த வார்த்தைகளை கேட்ட அர்ஜுனன் அந்த நீர்நிலைகளிற்கு சென்று, குளிப்பதற்காக மூழ்கினார்.

🦖அவர் மூழ்கியதும் அவனது காலை ஒரு பெரிய முதலை பற்றியது.

🦖ஆனால் பலம்  கொண்ட அர்ஜுனன் அந்த முதலையை தரையில் இழுத்துப் போட்டார்.

🦖அப்போது அங்கே அவரால் இழுத்துப் போடப்பட்ட முதலை ஒரு அழகிய பெண்ணாக மாறியது.

👸🏻 இதை கண்ட அர்ஜுனன் அவளை நோக்கி ” நீ யார், நீ ஏன் இந்த நீரை அதிகாரம்  செய்து கொண்டு இப்படிப்பட்ட பாவங்களை  இழைக்கிறாய்?” என்று கேட்டார்.

👸🏻அதற்கு அந்த மங்கை “நான் ஒரு அப்சரஸ் , எனது பெயர் வர்கா. நான் குபேரனுக்கு மிக அன்பானவள்.

👸🏻என்னுடன் இன்னும் நான்கு தோழிகள் இருக்கிறார்கள். நாங்கள் நினைத்த இடத்திற்கு செல்லக்கூடிய சக்தி பெற்றவர்கள்.




👸🏻ஒரு நாள் அவர்களுடன் குபேரனின் வசிப்பிடத்திற்கு சென்றேன். அப்போது நாங்கள் செல்லும் வழியில் கடும் தவம் இருந்த ஒரு அந்தணரை கண்டோம். அவர் தன் தவத்தால் அந்த பகுதியையே பிரகாசிக்க செய்திருந்தார்.

👸🏻அவரின் அர்ப்பணிப்பு மற்றும் அழகை கண்ட நாங்கள், அவரின் தவத்தை கலைக்க தீர்மானித்தோம்.

👸🏻 நானும் சௌரபேயி,சமிச்சி,வியுத்யுதா,லதா ஆகிய எனது தோழிகளும் சிரித்தும் பாட்டுப் பாடியும் பல வழிகளிலும் அந்த அந்தணரை மயக்க முயற்சி செய்தோம்.

👸🏻 ஆனாலும் அவர் மனதை எம்மால் கலைக்க முடியவில்லை. அவர் எங்களை கண்ட போது பெரும் கோபத்துடன்  பார்த்தார்.

👸🏻 எங்களை பார்த்து “நீங்கள் அனைவரும் முதலைகளாக மாறி நீர்நிலைகளில் அதிகாரம் செலுத்துங்கள் ” என்று சபித்தார்.

🙏 பின்னர் நாங்கள் துன்பமடைந்து, எமது தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு விமோசனம்  வேண்டினோம்.

🦖அப்போது அவர் “நீங்கள் முதலைகளாகி நூறு ஆண்டுகளுக்கு மனிதர்களை பிடித்து உண்ணுங்கள்.

😍அந்தக் காலத்தின் முடிவில் ஒரு மேன்மை  மிகுந்தவன் உங்கள் அனைவரையும் நீரில் இருந்து வெளியே இழுத்துப் போடுவான்.

👸🏻அப்போது நீங்கள் உங்கள் உண்மையான உருவத்தை அடைவீர்கள்” என்றார்.

😔 அதன் பின்னர் கனத்த இதயத்துடன் நாங்கள் அங்கே வசித்து வந்தோம்.

🙏அப்போது நாங்கள் அங்கே தெய்வீக முனிவரான# நாரதரை சந்தித்தோம்.

🙏அவரை வணங்கி எமது நிலைமையை துயரத்துடன் கூறினோம்.




நடந்தவற்றை கேட்ட அவர்……

😍“”தெற்கு கடலருகே இருக்கும் தாழ்ந்த நிலங்களில் ஐந்து புனித நீர்நிலைகள் இருக்கின்றன. தாமதமில்லாமல் அங்கே செல்லுங்கள்.

😍  பாண்டுவின் மகனான சுத்தமான ஆன்மா  கொண்ட தனஞ்செயன் உங்களை இந்த நிலையில் இருந்து விடுவிப்பான்”””என்று கூறினார்.

😍முனிவரின் வார்த்தைகளை கேட்ட நாங்கள் இங்கு வந்தோம். அவர் கூறியது போலவே நான் உங்களால் விடுவிக்கப்பட்டேன்.

😍ஆனால் எனது நான்கு  தோழிகள் அந்த நீர்நிலையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுப்பாயாக ” என்று வேண்டினாள்.

😍அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மற்றவர்களையும் சாபத்திலிருந்து   விடுவித்தார் அர்ஜுனன். அந்த நீர்நிலைகளையும் காப்பாற்றி, அவர்களையும் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி  வைத்தார்.

😘 அன்று ஸ்ரீராமனின்  பாதம் பட்டு கல்லாய் இருந்த அகலியை  சாப விமோசனம் பெற்றது போலவே,,,,

😘இந்த பார்த்தனால் ஐந்து அப்சரஸ்கள் சாப விமோசனம் பெற்றனர். நம் அர்ஜுனர் பெருமை  கூற வார்த்தைகள் ஏது??????????……..




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!