gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்:பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை தத்துவம்

​1. எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் :

நம்பிக்கையே உலகின் மிகவும் சக்திவாய்ந்த விஷயமாக நம்மால் கருதப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவரை குணமாக்குவது, துக்கத்தில் இருப்பவரை மகிழ்ச்சியாக மாற்றுவது, தோல்வி அடைந்தவரை வளர்ச்சிக்கு கொண்டு செல்வது என இவை அனைத்துமே நம்பிக்கையால் சாத்தியப்படும். நாம் வாழ்க்கையில் என்னவாக ஆக வேண்டும் என முடிவு செய்து, அதுவாக நிச்சயம் ஆவோம் என நம்பினால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.




2. அமைதியாக இரு :

மனம் அமைதியாக இருப்பது நம்முடைய மன தூண்டல்களை கட்டுப்படுத்த உதவும். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது எண்ணத்தெளிவு அடைவதற்கு உதவுவதுடன் நேர்மறை எண்ணங்களை நோக்கி நம்முடைய ஆற்றல் முறையாக செலுத்தவும் உதவும்.

3. கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே :

நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அந்த கடமையை மட்டும் செய்யுங்கள். ஆனால் அதனால் விளையும் பலன் உங்களின் சக்திக்கு அப்பாற்பட்டது. அதனால் அந்த செயலால் ஏற்படும் பலன் பற்றியோ, அது நடப்பது நீங்கள் தான் காரணம் என்றோ ஒரு போதும் நினைக்காதீர்கள். என பலன் கிடைக்கும் என அதன் மீது பற்று வைக்காமல் உங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்யுங்கள்.




​4. சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் :

குருஷேத்திர போருக்கு முன், தனது செயலால் ஏற்படும் விளைவுகளை புரிந்து கொள்ளாமல் தான் போரில் தோற்றி விடுவோம் என எண்ணி போரிட மறுத்தான் அர்ஜூனன். நாம் என்ன செய்ய வேண்டும், எதற்காக அதை செய்ய வேண்டும் என்ற காரணத்தை சரியான கண்ணோட்டத்துடன் பார்த்து புரிந்து கொள்வது இக்கட்டான சூழலில் நாம் செயலாற்ற உதவி செய்யும்.

​5. மாற்றம் என்பது இயற்கையின் விதி :

பகவத் கீதையின் படி அனைத்தும் மாறக் கூடியது. நம்முடைய உடல், உணர்வுகள், எண்ணங்கள் உள்ளிட்ட நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் மாற்றத்திற்கு உட்பட்டது. வெற்றியாளராக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் புதிய சூழல்கள், மாற்றங்கள், புதிய விஷயங்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் முடிவு நல்லதாகவே வரும். அதோடு புதிய வாய்ப்புகளும் வெளிப்படும்.

​6. மனம் வலிமையானது :

உங்களின் எண்ணங்களால் ஒன்று உங்களை உருவாக்க முடியும் அல்லது அழிக்க முடியும். நீங்கள் சரியாக அதை கையாண்டால் உங்களால் வெற்றி பெற முடியும். ஒருவேளை இது உங்களால் முடியாது என நீங்கள் நினைத்தால் நிச்சயம் நீங்கள் தோற்றுப் போவீர்கள்.




7. உடல் அழியக் கூடியது; ஆத்மா அழிவற்றது :

நம்முடைய புற உடல் என்பது தற்காலிகமானது, அழியக் கூடியது. அதே சமயம் நம்முடைய ஆத்மா நிரந்தரமானது. அது அழிவற்றது. இந்த உடலி அழித்து விட முடியும். ஆத்மாவை எவராலும் அழிக்க முடியாது.

  • ​8. நிகழ்காலத்தில் வாழுங்கள் :

    நிகழ்காலத்தின் முக்கியத்துவம் பற்றியும் பகவத்கீதை விளக்குகிறது. கடந்த காலம் நமக்கு பின்னால் உள்ளாது அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலம் தூரமாக உள்ளது. அதற்காக தயாராக இருங்கள். நிகழ்காலம் மட்டுமே தற்போது உள்ளது. அதை வாழுங்கள்.




  • ​9. கற்றுக் கொண்டே இருங்கள் :

    அறிவு மற்றும் ஞானத்தை பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் பகவத் கீதை விளக்குகிறது. நாம் ஒவ்வொரு செயலில் இருந்தும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும், வாழ்க்கை முழுவதும் இதை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் கீதை வலியுறுத்துகிறது. இன்றைய நவீன உலகில், பெற்ற தகவல்களை செயல்படுத்துவது எளிதானதல்ல. அதை நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூக வளர்ச்சிக்கான அறிவாக பயன்படுத்துவது அவசியமானது.

    10. சகிப்புத்தன்மையையும், மறதியையும் பழகுங்கள் :

    கடினமான சமயங்களில் வாழ்க்கையை சமநிலையுடன் நடத்தவும், அந்த நிலையில் இருந்து மீண்டும் வரவும் சகிப்புத்தன்மை கற்றுத் தரும். அநீதியையும், பகைமை உணர்வையும் கடந்த வர மறதி நமக்கு உதவும். இந்த தகுதிகளை வளர்த்துக் கொண்டால் உறவுகளை பாதுகாக்க முடியும். அனுதாபம், அன்பு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறுப்பு உணர்வுகளில் இருந்து வெளியே வாருங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!