Beauty Tips

பெண்கள் தவிர்க்க வேண்டிய ஹேர் ஸ்டைல்ஸ்!…

வழுக்கை விழுவதற்கான பல காரணங்களில் ஒன்று ஹேர் ஸ்டைல்ஸ். நாம் சிறு வயதிலிருந்து பயன்படுத்தும் சில ஹேர் ஸ்டைல்ஸ் கூட வழுக்கை ஏற்படுவதற்கு காரணமாகிவிடுகிறது. என்னென்ன ஹேர் ஸ்டைல்ஸை தவிர்ப்பது என்று பார்ப்போம்.

பொதுவாக முடியை இறுக்கிப் பின்னுவதால், ஏற் நெற்றி ஏற்படும். அதேபோல் நெற்றியின் இரண்டு பக்கங்களிலும் முடி இல்லாமல் போய்விடும். இதனை Baldness என்று முழுமையாக சொல்லிவிட முடியாது. சரியாக இதனுடைய பெயர் Traction Alopecia என்று சொல்வார்கள்.




ஊட்டச்சத்து குறைப்பாடு, மன அழுத்தம், வேலை அழுத்தம் என இதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் ஹேர் ஸ்டைல். சிலர் ஜடையை இறுக்கமாக பின்னிப் போட்டால், முடி வலுவாகி ஆரோக்கியமாகவும் முடி உதிராமலும் இருக்கும் என்று கூறுவார்கள்.

Traction Alopecia

ஆகையால் சிறு வயதிலிருந்தே இறுக்கி பின்னிப் போடுவார்கள். சிலர் முழுமையாக கூந்தலை விரித்துப் போட்டால், முடி எந்த அழுத்தமும் இல்லாமல் சிறப்பாக வளரும் என்று கூறுவார்கள். ஆனால், இவற்றில் எது உண்மை? என்ன ஹேர் ஸ்டைல்தான் போடுவது? எதை அன்றாடம் பயன்படுத்துவது? இந்த கேள்விகளை கேட்கும்போதே சற்று டயர்டாகுதே…




சரி… பதில் கிடைத்தால் மீண்டும் புத்துணர்ச்சியாகி விடுவோம். No tension…

தவிர்க்க வேண்டிய மற்றும் பயன்படுத்த வேண்டிய ஹேர் ஸ்டைல்ஸ்:

1. High Ponytail: அனைத்து முடிகளையும் ஒன்றிணைத்துத் தூக்கி இறுக்கமாக Band போட்டு கட்டக்கூடாது. இப்படி செய்வதால், முன் நெற்றியில் முடி இறுக்கமாகி உதிர்ந்துவிடும். அதற்கு பதிலாக, கீழே இறக்கி லூசாக போனிடெயில் போடலாம்.

2.  Tight Buns: கொண்டைப் போடாத பெண்கள் இல்லவே இல்லை. வீட்டு வேலை செய்பவர்கள், வீட்டிலிருந்து லேப்டாப்பில் வேலை செய்பவர்கள் என அனைவருமே பயன்படுத்தும் ஹேர் ஸ்டைல் கொண்டை. கொண்டையிலேயே தற்போது நிறைய ஸ்டைல்ஸ் வந்துவிட்டன. ஆனால், அதிலும் இறுக்கமாக போடுவதுதான் முடி உதிர்வுக்கு காரணமாகிவிடுகிறது. குறிப்பாக முன் நெற்றியில் முடி இல்லாமல் போய்விடும். ஆகையால், கொண்டையிலேயே லூசாக போடும் ஸ்டைலைப் பயன்படுத்துங்கள்.

3.  இறுக்கமான பின்னல்: நாம் சிறுவயதிலிருந்தே பள்ளிக்குப் போகும்போது இரு பக்கமும் இறுக்கி பின்னிக்கொண்டு செல்வோம். முக்கால்வாசி பிரச்சனைகளுக்கு அதுதான் காரணம். பின்ன வேண்டும் என்று முடிவெடுத்தால் இறுக்கமாக பின்னாமல், சற்று லூசாகப் பின்னுங்கள். இது உங்கள் முடிக்கு அழுத்தம் கொடுக்காமல், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

இந்த மூன்று ஸ்டைல்களில் மட்டும் கவனமாக இருங்கள். எந்த ஸ்டைலையுமே இறுக்கமாகப் போடாதீர்கள். அப்போதுதான் முன் நெற்றியில் முடி அடர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும். முடியை இழுத்து கட்டுவதையும் பின்னுவதையும் தவிர்த்தாலே, முன் நெற்றியின் முடி பிரச்சனை தீர்ந்துவிடும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!