Cinema Entertainment

பாண்டியனிடம் சவால் விட்ட கதிர்..குறைக் கூறி பற்ற வைக்கும் தங்கமயில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா வேலை விஷயமாக சென்னைக்கு போக வேண்டும் என்பதால் செந்திலை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். இதற்கு இடையில் தியேட்டருக்கு போன சரவணன் மற்றும் தங்கமயில் திரும்பி வந்து எப்படியாவது தம்பியை பார்த்து விட வேண்டும் என்று சரவணன் பஸ் ஸ்டாண்டுக்கு போகிறார். ஆனால் சரவணன் வருவதற்கு முன் செந்தில் மீனா போய் விடுகிறார்கள்.

அதே மாதிரி வீட்டிற்கு வந்த தங்கமயில், மீனா இல்லை என்றதும் போன் பண்ணி நாங்க வருவதற்குள் நீங்க கிளம்பிட்டீங்களா என்று கேட்டு பேசிய பின் மாமாவிடம் பேசுகிறீர்களா என்று பாண்டியனிடம் போன் கொடுக்கிறார். உடனே மீனா நான் என்ன பேச என்று செந்திலிடம் போனை கொடுத்துவிடுகிறார். உடனே பாண்டியன் வழக்கம்போல் செந்திலை திட்டிவிட்டு ரூம்குள்ளயே இருக்காதீர்கள். நான் சொன்ன வேலையை பார்த்துட்டு மீனாவையும் வெளியே கூட்டிட்டு போ என்று சொல்கிறார்.




எஸ்கேப் ஆகும் தங்கமயில்

பிறகு பாண்டியன் 1500 ரூபாய் செலவு ஆயிட்டு என்று புலம்பிய நிலையில் தங்கமயில், சரவணன் இடம் உங்க அப்பா என்ன ரொம்ப ஓவரா பண்றாங்க. அடிக்கடி நம்ம செலவு பண்ற மாதிரி பேசுகிறார். எப்பவாவது ஒரு முறை தான் இந்த மாதிரி நாம் போகிறோம். அதற்கு ஏன் அசிங்கப்படுத்தும் விதமாக செலவாகியதைப் பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார் என்று வத்தி வைக்கிறார்.

உடனே சரவணன், அப்பா சொன்னா எல்லாம் சரியாகத்தான் இருக்கும். இனி நம் தேவை இல்லாமல் எந்த செலவும் பண்ண வேண்டாம் என்று தங்கமயிலிடம் சொல்கிறார். இவர் என்ன இப்படி அப்பா பிள்ளையாக இருக்கிறார் என்று தங்கமயில் மனதிற்குள் புலம்பிக் கொள்கிறார். அடுத்தபடியாக ராஜி டியூஷன் எடுக்கும் விஷயமாக பசங்களை கூட்டிட்டு வர வேண்டும் என்பதற்காக சித்தப்பா பழனிவேலை ஐஸ் வைக்கிறார்.




அது தெரியாமல் பழனிச்சாமியும் ராஜூ சொன்னதை கேட்டு நம்பி விடுகிறார். இதை பார்த்த கதிர், ராஜி உங்களை ஐஸ் வைத்து காரியத்தை சாதிக்க பார்க்கிறார். இது கூட உங்களுக்கு புரியலையா என்று சொல்கிறார். உடனே ராஜி நீங்க எனக்கு டியூஷனுக்கு 10 பிள்ளைகளை சேர்த்து விடுங்கள். அதுல ஒரு பிள்ளைகளுடைய டியூஷன் பீசை நான் உங்களுக்கு தருகிறேன் என்று டீல் பேசுகிறார்.

இது சரியாக இருக்கிறது என்று பழனிவேல் ராஜி டியூஷன் எடுப்பதற்கு பிள்ளைகளை கூட்டிட்டு வருகிறார். பிறகு வாசலில் இருந்து ராஜி டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தங்கமயில், ராஜி டியூஷன் எடுப்பதை பார்த்துவிட்டு அப்படியே எஸ்கேப் ஆகிவிடலாம் என்று வீட்டிற்குள் நுழையப் போனார். ஆனால் ராஜி அதை பார்த்துவிட்டு தங்கமயிலிடம் ஒரு பையனுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்க சொல்கிறார்.

ஆனால் தங்கமயில் கொஞ்சம் கூட படிக்கவில்லை என்பதால் அவரால் சொல்லிக் கொடுக்க முடியாத காரணத்தினால் ஏதாவது சொல்லி சமாளித்து வீட்டிற்குள் போய்விடுவார். ஆனால் நிச்சயம் ஒரு நாளில் இந்த ஒரு விஷயம் அனைவருக்கும் தெரிய வரப்போகிறது. இதனை தொடர்ந்து ராஜி எப்படியாவது நாம் சம்பாதித்து பணம் சேர்த்து மாமாவிடம் கதிர் விட்ட சவாலில் ஜெயித்துக் காட்டும் விதமாக பணத்தை கொடுக்க வேண்டும் என்று உதவி பண்ணும் விதமாக டியூஷன் எடுத்து வருகிறார்.




What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!