Cinema Entertainment

பயத்தில் உளறிய போலி சாமியார்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், ரம்யா தான் ஏற்பாடு செய்த போலி சாமியாரை பார்க்க அழைத்து செல்கிறாள். போகும் வழியில் டீ குடிக்கலாம் என்று சொல்லி, வேண்டும் என்றே தீபா மீது டீயை கொட்டி, அம்மனுக்கு சார்த்திய புடவையை தீபா கட்டி இருக்கக்கூடாது என்று வேண்டும் என்றே அப்படி செய்கிறாள். இதையடுத்து, தீபாவும் ரம்யாவும் சாமியாரின் ஆசிரமத்திற்கு வருகின்றனர்.

மறுபக்கம், ரியாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு ராஜேஸ்வரி மார்க்கெட் சென்றுவிட்டு திரும்பி வரும் போது போலீசுடன் வந்து இறங்குகிறாள். இதைப்பார்த்த ரியா அதிர்ச்சி அடைந்து, கிச்சனுக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறாள். ராஜேஸ்வரி உள்ளே வர கழுத்தில் கத்தியை வைத்து அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.




zee tamil Karthigai Deepam

பயந்த ரியா: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ரியா ராஜேஷ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட, அவள் உன்னை மாட்டி விட நான் போலீசை கூட்டிட்டு வரல, நீ என் போலீசை பார்த்து பயப்படுற, நீ என்ன குற்றவாளியா என ராஜேஷ்வரி ரியாவிடம் கேட்கிறாள். அப்போது ரியா, அபிராமியை துப்பாக்கியால் சுட்ட விஷயத்தை சொல்லுகிறாள். இதையடுத்து, அபிராமி சுடப்பட்ட போது காணாமல் போன, கேமிரா மேன் சுரேஷ், ரியா அபிராமியை சுட்ட வீடியோவை ரியாவிற்கு அனுப்புகிறான். இதைப்பார்த்து பயந்த ரியா, சுரேஷிற்கு போன் செய்து மரியாதையா அந்த வீடியோவை என்கிட்ட கொடுத்துடு, உனக்கு தேவையான பணத்தை நான் தரேன் என்று மிரட்டுகிறாள்.




தப்பிச்செல்லும் கேமரா மேன்: இந்த விஷயம் போலீசுக்கு தெரியவர, போலீசும் சுரேஷை அழைத்து விசாரிக்க அவன் எதுவும் தெரியாதது போல இருக்கிறான். இதையடுத்து, அருண், ஆனந்த் சுரேஷ் வீட்டை சுற்றி வளைத்து கதவை தட்ட இவர்களை பார்த்த சுரேஷ், இது பெரிய பிரச்சனை போல, இங்க இருந்து எஸ்கேப் ஆக வேண்டியது தான் நமக்கு நல்லது என்று பின்பக்கமாக தப்பி ஓட முயற்சி செய்கிறான். அருண், ஆனந்த் அவனை துரத்தி பிடிக்க முயற்சி செய்தும் அது முடியாமல் போய்விட சுரேஷ் தப்பிச்சென்றுவிடுகிறான்.

ஆசிரமத்தில் தீபா: இதையடுத்து, ஆசிரமத்திற்கு தீபாவும் ரம்யாவும் வர, அங்கு 20 பேர் வெளியே தூங்கி கொண்டிருக்க ஒருவன் வாங்க சாமியார் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்காரு. இந்த சாமியாரை நினைத்த உடனே எல்லாம் பார்க்க முடியாது, யாரை பார்க்க வேண்டும் என்று சாமியார் தான், முடிவு பண்ணுவார், இன்னைக்கு அவர் உங்களை பார்த்த அழைத்தது பெரிய விஷயம் என்று சொல்லி ஓவர் பில்டப் கொடுக்கின்றனர்.

உடனே ரம்யாவும் நானும் விசாரிச்சேன், அவரே நம்ம பேர் என்னனு கூட சொல்வாருன்னு கேள்வி பட்டேன் என்று அளந்து விடுகிறாள். பிறகு உள்ளே சென்றதும், போலி சாமியார், உங்க பேர் ரம்யா.. உங்க பேர் தீபா என்று பயத்தில் பெயரை மாற்றி சொல்ல ரம்யா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பதை  பொறுத்திருந்து பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!