தோட்டக் கலை

பன்னீர் ரோஜா வளர்ப்பு

பன்னீர் ரோஜா வளர்ப்பு

பன்னீர் ரோஜா

பன்னீர் ரோஸைப் பொறுத்தவரை அலங்காரப் பொருளாகவும், ஆரோக்ய பொருளாகவும் உள்ளது. பன்னீர் ரோஜாவை மாடித்தோட்டத்திலோ, வீட்டுத்தோட்டத்திலோ அல்லது பணப்பயிராக விவசாய நிலங்களிலோ வளர்க்கலாம். சாதாரண ரோஸ் செடிக்கு மண் தயாரிப்பதைப் போலவே இதற்கும் மண் கலவை தயார் செய்ய வேண்டும்.




உரம் தயாரிப்பு

தேவையான பொருட்கள்

  • டீத்தூள் கழிவுகள் – 50 கிராம்

  • முட்டை ஓட்டுத்தூள் – 2 ஸ்பூன்

  • வாழைப்பழத்தோல் – சிறிதளவு

  • புளித்த மோர் – 2 ஸ்பூன்

  • தண்ணீர் – தேவையான அளவு




செய்முறை

ஒரு பக்கெட்டில் பாதியளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் பக்கெட்டில் உள்ள தண்ணீரில் நன்றாக கலந்து மூன்று நாட்கள் ஊற வைக்கவும். பின்னர் ரோஸ் செடி நட்டு வைத்துள்ள வேர்ப்பகுதியில் பாத்தி எடுத்து ஊற வைத்துள்ள தண்ணீரை வேர்பகுதியில் படுமாறு ஊற்றி பின் மண் அணைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது பதினைந்து நாளுக்கு ஒரு முறையோ இவ்வாறு செய்யலாம்.

ரோஜாச்செடி வளர்த்து அதிக பூக்கள் பெறுவது எப்படி?

  • ரோஸ் செடியில் பூக்கள் பறிக்கும்போது பூக்களை மட்டும் பறிக்காமல் இரண்டு இலைகளையும் சேர்த்து பறிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் புதிய இலைகள் துளிர் விட உதவியாக இருக்கும்.

  • உரமாக டீத்தூள், வெங்காயத்தோல், முட்டை ஓடு, காய்கறி கழிவுகள் போன்றவற்றை உரமாக இடலாம்.

  • வாழைப்பழத்தோலை சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை செடிக்கு ஊற்றலாம்.

  • பழைய சாதத்தின் தண்ணீரை வடிகட்டி ஊற்றலாம்.

  • ரோஸ் செடிகளுக்கு உரம் வைப்பதாக இருந்தால் அன்று முழுவதும் செடிக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.

  • ரோஜா செடியை பொறுத்தவரை உரம் வைப்பதாக இருந்தால் மாலை நேரத்தில் வைப்பது சிறந்தது.

  • எப்பொழுதும் ரோஜா செடி வளர்க்க இயற்கை உரங்கள் சிறந்தது.




ரோஜா செடி பதியம் போடுவது எப்படி?

கொஞ்சம் நன்றாக வளர்ந்த தண்டாக இருப்பது பதியம் போட சிறந்தது. ரோஜா தண்டு துளிர்ப்பதற்கு காய்ந்து போகாமல் இருக்க வேண்டும், அதற்காக தண்டின் நுனியில் பசுசாணத்தை வைக்கலாம்.

செடி துளிர்க்கும் வரை தண்ணீரை மட்டுமே தெளிக்க வேண்டும். செடி நன்றாக துளிர்த்து வளர ஆரம்பித்த பிறகு வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும்.

ரோஜாச்செடி பதியம் போடுவது எப்படி என்று இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பார்க்கவும்.

ரோஸ் செடி வளர்ப்பு என்பது இன்று அனைவரும் விரும்பும் ஒரு விஷயமாகும். விதவிதமான, அழகழகான ரோஜாப்பூக்கள் அனைவரையும் கவர்கின்றன. ரோஜாப்பூவின் நறுமணமும் அனைவரையும் ஈர்க்கக்கூடியது, இதனால் ரோஜாப்பூ அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!