Samayalarai

திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா

திருநெல்வேலி என்றாலே எல்லாருடைய நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். ஆனால், இங்கு  ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று மொச்சை மசாலா. இது திருநெல்வேலி மட்டுமின்றி தூத்துக்குடியிலும் ஸ்பெஷல் தான். ஆனால், இந்த மொச்சை மசாலா குறித்து சில பேருக்கு மட்டுமே தெரியும்.

உங்கள் வீட்டில் மொச்சை வாங்கினால் ஒரு முறை கண்டிப்பாக இந்த மொச்சை மசாலாவை செய்து பாருங்கள், பிறகு, அடிக்கடி நீங்களே செய்வீங்க. மேலும் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த மொச்சை மசாலாவை விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த மொச்சை மசாலா ரெசிபி செய்ய அதிக நேரம் எடுக்காது. ரொம்பவே ஈசி. இந்த மொச்சை மசாலாவை நீங்கள் சூடான சாதத்துடன் சாப்பிடலாம் (அ) இட்லி, தோசையுடன் சேர்த்தும் கூட சாப்பிடலாம். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஸ்பெஷல் மொச்சை மசாலா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.




பாட்டி கை பக்குவத்தில் செய்தது போன்ற சுவையில் மொச்சைக் கொட்டை காரக்குழம்பு!

மொச்சை மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
கடுகு – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 1 டீஸ்பூன்
மொச்சை – 1 கப் (அவித்தது)
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு

 




mochchai kulambu

  • செய்முறை: 

    மொச்சை மசாலா செய்ய முதலில், ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

  • பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

  • இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போன பிறகு பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

  • இப்போது ஏற்கனவே, அவித்து வைத்துள்ள ஒரு கப் மொச்சையை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள் பிறகு, ஒரு கப் தண்ணீரையும் இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது, இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்ததும், திறந்து பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை மசாலா ரெடி!!!

  • இந்த ரெசிபியை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பார்த்து சுவை எப்படி இருந்தது என்று உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்…




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!