Cinema Entertainment

திமிரு படத்தோட கதையை இந்த நடிகருக்காக தான் எழுதினேன்… இயக்குனர் தருண் கோபி பகிர்வு…

தருண் கோபி தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் பிறந்து மதுரையில் வளர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்த உடனேயே சினிமாவில் இருந்த ஆர்வத்தால் உதவி இயக்குனராக பணியாற்ற தொடங்கினார். இயக்குனர் சக்தி சிதம்பரம் மற்றும் உபேந்திரா ஆகியோரிடம் பயிற்சி பெற்றார்.

Thimiru (2006) - Posters — The Movie ...

முறையான பயிற்சிக்கு பிறகு தருண் கோபி இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பணியாற்றியவர். 2006 ஆம் ஆண்டு விஷாலை வைத்து ‘திமிரு’ என்ற மசாலா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.




தருண் கோபியின் முதல் படமான ‘திமிரு’ மாபெரும் வெற்றிப் பெற்று அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக மாறியது. 2008 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து ‘காளை’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக பேசப்படவில்லை.

அடுத்ததாக ஒன்பது இயக்குனர்கள் சேர்ந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதை ஏற்றுக் கொண்டார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று பிரபலமானார் தருண் கோபி. தொடர்ந்து ‘பேச்சியக்கா மருமகன்’, ‘காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் தருண் கோபி.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட தருண் கோபி, தனது முதல் படமான ‘திமிரு’ படத்தை இயக்கிய அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால்,  திமிரு படத்தின் கதையை சிம்புவுக்காக தான் எழுதினேன். சிம்புவின் அம்மா இந்த கதையில் ஹீரோயின் டாமினேஷன் இருக்குனு வேணாம்னு சொன்னதால சிம்பு படத்தில் நடிக்க ஒத்துக்கவில்லை. பின்னர் விஷாலிடம் பேசி ஓகே பண்ணினோம். படம் ஹிட் ஆகிடுச்சு என்று பகிர்ந்துள்ளார் தருண் கோபி.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!