Samayalarai

தயிரை வைத்து தலை முடி பராமரிக்கலாம்!

தங்களது தலைமுடி உதிராமல் இருக்க, கருமையாக மற்றும் அடர்த்தியாகவும், பட்டுப் போலவும் தான் நாம் அனைவரும் விரும்புகிறர்கள். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் பின்பற்றும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியமும் பலருக்கும் இளமையிலேயே பாதிக்கப்பட்டு விடுகிறது.




hair mask : ஹேர் மாஸ்க்ன்னா என்ன. எந்தெந்த பொருளை பயன்படுத்தணும்.. என்ன நன்மைகள் கிடைக்கும்? - what is hair mask and its benefits - Samayam Tamil

நம்முடைய தலைமுடி ஆரோக்கியமாக இருக்க எந்த வித ரசாயனமும் இல்லா பல்வேறு இயற்கை பொருட்கள் உதவுகின்றன. அப்படிப்பட்ட இயற்கையான ஒன்று தான் தயிர். நம்முடைய கூந்தலுக்கு தயிர் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். தயிரிலுள்ள வைட்டமின்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், லாக்டிக் ஆசிட் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நம்முடைய கூந்தலுக்கு தேவையான முடிக்கு முழு ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.

தயிரில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைக்க மற்றும் பொடுகை குறைக்க உதவுகிறது. எனவே தயிரை நேரடியாக தலை முடியில் தடவி சிறிது நேரம் ஊறவைத்தும் பயன்படுத்தலாம். கூந்தலுக்கு தயிரை பயன்படுத்த கூடிய வேறுபல வழிகளை பற்றி இங்கே பார்ப்போம்.

வினிகருடன் தயிர்: நீங்கள் பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர் என்றால் தயிருடன் வினிகரை கலந்து உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்துங்கள். இதனை பயன்படுத்திய பிறகு உங்களின் கூந்தல் மிகவும் ஸ்மூத் மற்றும் சாஃப்ட்டாக மாறுவதை காணலாம்.

தயிர் மற்றும் தேன்: உங்கள் கூந்தலை சிறப்பாக கண்டிஷனிங் செய்ய தயிருடன் தேன் கலந்து பயன்படுத்துங்கள். ஏனெனில் இந்த கலவை இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. மேலும் தயிர் மற்றும் தேன் கலந்த ஹேர்மாஸ்க் உங்களுக்கு மிருதுவான மற்றும் பளபளப்பான தலைமுடியை அளிக்கும்.

தயிர் மற்றும் முட்டை: சிறப்பான முடி வளர்ச்சிக்கு தயிர் மற்றும் முட்டை கலவையை பயன்படுத்துங்கள். ஏனெனில் இந்த ஹேர் மாஸ்க் மிக்சிங் முடி மற்றும் ஸ்கால்ப்பிற்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது, மேலும்கூந்தலை மிகவும் மென்மையாக்குகிறது.




தயிர் மற்றும் வெந்தயம்: நீங்கள் பொடுகு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் தயிர் மற்றும் வெந்தய மிக்ஸிங் ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம், இது பொடு தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் இயற்கை தீர்வாகவும் இருப்பதோடு கூந்தலுக்கு மென்மை மற்றும் ஷைனிங்கை அளிக்கிறது.

தயிர் மற்றும் எலுமிச்சை: பொடுகு தொல்லையை குறைக்க விரும்பினால் தயிர் உடன் எலுமிச்சை சாறை சேர்த்து பயன்படுத்துங்கள். இந்த மிக்ஸிங்கை பயன்படுத்திய பின் உங்கள் கூந்தலை சரியாக வாஷ் செய்யாவிட்டால் முடியை உலர்ந்து விடும். எனவே இந்த மிக்சிங்கை பயன்படுத்திய பிறகு ஸ்ட்ராங்கான மற்றும் சிறந்த ஷாம்பூவை பயன்படுத்தவும்.

தயிர் மற்றும் மஞ்சள்: தலைமுடி உதிர்வதையும், முடி மெலிவதையும் நீங்கள் தடுக்க விரும்பினால் மஞ்சள் கலந்த தயிரை பயன்படுத்துங்கள். பின்னர் மைல்ட்டான் ஷாம்பூ கொண்டு முடியை நன்கு அலசவும்.

தயிர், தேன் மற்றும் முட்டை: உங்களுக்கு முடி உதிரும் பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது என்றால் தேன் மற்றும் முட்டையுடன் தயிரை கலந்து தலைமுடிக்கு தடவவும். இந்த மிக்ஸிங் உங்கள் தலைமுடியை ஸ்மூத் மற்றும் ஷைனிங்காக வைக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!