Cinema Entertainment

தங்கமயிலை வெளுத்து வாங்கும் புருஷன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் ஆசை ஆசையாக எடுத்துக் கொடுத்த டிரஸ்சை ராஜி போட்டுக்கொண்டு சந்தோசமாக வருகிறார். ராஜியின் சந்தோஷத்திற்கு என்ன காரணம் என்று மாமியார் கோமதி மற்றும் மீனாவும் கேட்கிறார்கள். அதற்கு இப்பொழுது நான் போட்டிருப்பது புது டிரஸ். யார் வாங்கிக் கொடுத்தாங்க என்று தெரியுமா என கேட்கிறார்.

உடனே ராஜி வெட்கப்படும் முகத்தை வைத்துக்கொண்டு மீனா இது கதிர் வாங்கி கொடுத்த டிரஸ் என்று கண்டுபிடித்து விட்டார். பிறகு கதிர் வந்ததும் ராஜி அவர் முன்னாடி போய் நின்னு அங்கே இங்கேயுமாய் அலைந்து டிரஸ்சை பற்றி ஏதாவது சொல்லுவார் என ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கதிர் அதையெல்லாம் கவனிக்காமல் வேலைக்கு நேரம் ஆகிவிட்டது என்று அவசரத்தில் கிளம்புகிறார்.




மருமகளை சமாதானப்படுத்திய பாண்டியன்

இதற்கு கோமதி, கதிரிடம் நீ ஆசையாக வாங்கிக் கொடுத்த டிரஸ்ஸை போட்டுக்கிட்டு ஏதாவது சொல்லுவாயா என்று ராஜி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏதாவது ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போ என்று சொல்கிறார். அப்பொழுதுதான் கதிர், ராஜி போட்டிருக்கும் டிரெஸ்ஸை கவனித்து பார்க்கிறார். அப்பொழுது கண் சைகை வைத்து டிரஸ் நல்லா இருக்கு என்று கதிர் சொல்லி விடுகிறார்.

இதனால் ராஜி ரொம்பவே சந்தோஷப்பட்டுக் கொள்கிறார். உடனே கோமதியும் ராஜியும் சேர்ந்து கோவிலுக்கு போகிறார்கள். அங்கே போனதும் ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா சாமி கும்பிட்டு இருக்கிறார்கள். உடனே கோமதி நம்மளும் வா அங்க போகலாம் என்று ராஜியை கூட்டிட்டு போகிறார். உடனே சக்திவேல், ராஜ்ஜிய பார்த்து என்னுடைய தங்கச்சியும் இல்லை, இப்பொழுது என் மகளும் செத்துப் போயிட்டாள் என்று வார்த்தையாலே நோகடித்து விட்டார்.




இதை கேட்டு ராஜி அழுது மன வேதனையில் தவிக்கிறார். உடனே பாண்டியன் என்னாச்சு என்று கேட்கும் பொழுது கோமதி நடந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு ராஜிக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பாண்டியன், உனக்கு அப்பாவாக நானும் அம்மாவாக அத்தையும் இருக்கிறோம். வேறு எதையும் நினைத்து நீ கவலைப்படாதே என்று சொல்லி சமாதானப்படுத்தி ராஜியை வீட்டுக்கு கூட்டிட்டு போகிறார்.

இதற்கிடையில் மீனா, செந்திலிடம் மன்னிப்பு கேட்டு உங்க பேசியது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்று கேட்கிறார். அதற்கு செந்தில், அவருக்கு வேலை உழைப்பு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அதனால அவர் திட்டுவதை நீ பெருசாக எடுத்துக் கொள்ளாதே. எனக்கு இதெல்லாம் பழகி போய்விட்டது என்று பேசிக்கொண்டே போகிறார்கள்.

அடுத்ததாக வீட்டில் ராஜி மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது ராஜி நம்ம மாமா எந்த அளவுக்கு கோபப்படுகிறாரோ, அதே மாதிரி நம்ம மேல பாசமும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்று சொல்கிறார். அதற்கு மீனாவும் ஆமாம் சரிதான் என்று சொல்லிய நிலையில் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அதை கோமதியும் கவனித்து ஆனந்த கண்ணீர் விடுகிறார்.

ஆக மொத்தத்தில் பாண்டியன், இந்த தங்கமயில் மருமகளாக வருவதற்கு முன் நல்லாதான் இருந்தார். எப்பொழுது மருமகளாக வந்து பாண்டியனிடம் போட்டு கொடுத்தாரோ, அப்பொழுதே பாண்டியன் கெட்டு குட்டிச்சுவர் ஆகிவிட்டார். இதனைத் தொடர்ந்து அத்தை, மீனா ராஜி மற்றும் கதிர் அனைவரும் நம்மளை திட்டுகிறார்கள் என்று ஒவ்வொரு முறையும் சரவணனிடம் சொல்கிறார்.

இதை கேட்ட சரவணன் உன் மீது தான் தப்பு இருக்கிறது என்று தங்கமயிலை சுட்டிக்காட்டி விட்டார். எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று அதை நீ கற்றுக் கொள். இஷ்டத்துக்கு நாம் நினைக்கிற படி எல்லாம் பேசிட முடியாது. நீ இப்படியே இருந்த இந்த குடும்பத்தில் ஒவ்வொரு பிரச்சினைகளாக வெடித்துக் கொண்டே தான் வரும் என்று தங்கமயிலை திட்டப் போகிறார்.

பிறகு இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக தங்கமயிலின் அம்மா பாக்கியம் இன்னும் குடும்பத்தில் என்ன எல்லாம் குளறுபடி பண்ணலாம் என்று சதித்திட்டங்களை தீட்டி போட்டுக் கொடுக்கப் போகிறார். அதன்படி பாண்டியன் சிக்கி தவிக்கப் போகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!