Cinema Entertainment

தங்கமயிலிடம் எரிந்து விழுந்த மீனா! -பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா மற்றும் செந்தில் வீட்டிற்குள் நுழைந்ததும் பாண்டியன் மொத்த கோபத்தையும் காட்டி அவமானப்படுத்தி திட்டுகிறார். இதனை ஒட்டுமொத்த குடும்பமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தங்கமயில் சிரித்து அசிங்கப்படுத்துகிறார். இதனால் கோபப்பட்ட மீனா ரூமுக்குள் போய் அழுது கொண்டிருக்கிறார்.

பிறகு மீனாவை சமாதானப்படுத்துவதற்காக ராஜி மற்றும் கோமதி உள்ளே போகிறார்கள். அங்கே போனதும் கோமதி இடம், ரெண்டே ரெண்டு நாள் தான் வேலை விஷயமாக போனேன். அதிலும் செந்தில் அங்கு இருக்கும் வேலைகளை பார்த்துட்டு கொஞ்ச நேரம் தான் எனக்காக நேரத்தை ஒதுக்கினார். அதுக்கு இவ்வளவு பேசணுமா, அதுவும் எல்லாரும் முன்னாடியும் அசிங்கப்படுத்தும் அளவிற்கு அவமானப்படுத்தி விட்டார் என்று மீனா புலம்புகிறார்.




Pandian-stores-2-serial-new

ராஜியை சமாதானப்படுத்திய பாண்டியன்

உடனே கோமதி அவர் என்ன மற்றவர் முன்னாடியே பேசினாங்க. குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி தானே இதெல்லாம் பெருசா கண்டுக்காத என்று சமாதானப்படுத்தி விட்டார். அதற்கு மீனா, மாமா செந்திலை திட்டும் பொழுது தங்கமயில் வேற சிரித்து அசிங்கப்படுத்தி விட்டார் எனக்கு ரொம்ப அவமானமாக போய்விட்டது என்று சொல்கிறார். அப்பொழுது ராஜி ஆமாம் நானும் கவனித்தேன் தங்கமயில் சிரித்தார் என்று சொல்லிய நிலையில், கோமதி கொஞ்சம் கூட தங்கமயிலுக்கு புரிஞ்சுக்கிற மூளையை இல்லை என்று சொல்கிறார்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தங்கமயில் உள்ளே நுழைந்து மீனாவிடம் காபி டீ வேணுமா குளிக்க சுடு தண்ணீர் போடணுமா என்று கேட்கிறார். அதற்கு மீனா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க வருவதற்கு முன்னாடி என் வேலையை நான் தான் பார்த்தேன். எனக்கு கை கால் இருக்கிறது நானே பார்த்துக்கொள்கிறேன். உங்க வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் என்று சொல்லிவிட்டார்.




தங்கமயில் வழக்கம் போல் ஏன் இப்படி கோபமாக பேசுகிறார் என்று அழ ஆரம்பித்து விட்டார். பிறகு மறுநாள் மீனா ஆபிஸ்க்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது ராஜி, கதிர் வாங்கி கொடுத்த புது ட்ரெஸ்ஸை போட்டு மாமியார் கோமதி இடமும் மீனா விடமும் சீன் போடுகிறார். என்ன ஆச்சு உனக்கு என்று மீனா கேட்கும் போது இது கதிர் எனக்காக வாங்கி கொடுத்த டிரஸ் என்று பெருமையாக சொல்கிறார்.

இதை கேட்டதும் மீனா மற்றும் கோமதி சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். இதனை தொடர்ந்து ராஜியை கோவிலுக்கு கோமதி கூட்டிட்டு போகிறார். அங்க ராஜியின் அப்பா மற்றும் சித்தப்பா வருகிறார்கள். அப்பொழுது ராஜியை பார்த்து இவள் என் பொண்ணே இல்லை, என் மகள் செத்துப் போயிட்டா என்று கோபத்தில் திட்டி விடுகிறார். இதைக் கேட்டதும் ராஜி அழ ஆரம்பித்து விட்டார்.

உடனே பாண்டியனும் கோவிலுக்குள் வந்து என்னாச்சு என்று கேட்கும் பொழுது கோமதி நடந்த விஷயத்தை சொல்லுகிறார். அப்பொழுது பாண்டியன், ராஜி இடம் நீ எதை நினைத்தும் கவலைப்படாத. உன் அப்பா இடத்தில் நானும் உன் அம்மா இடத்தில் உங்க அத்தையும் இருந்து உன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறோம் என்று ஆறுதலாக சொல்லி சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார்.

வீட்டுக்கு போனதும் ராஜி மற்றும் மீனா இருவரும் மாமனார் கோவப்பட்டாலும் அவருடைய மனதில் ரொம்பவே அக்கறையும் பாசமும் இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். இதை பார்த்ததும் கோமதி ஆனந்தத்தில் சந்தோஷப்பட்டு கொள்கிறார். ஆனால் இதை கெடுக்கும் விதமாக தங்கமயில் நிச்சயமாக ஏதாவது வேலையை பார்க்கப் போகிறார்.

அந்த வகையில் சரவணன் மாமியார் அவ்வப்போது ஏதாவது குளறுபடிகளை பண்ண சொல்லி குட்டையை குழப்புகிறார். உடனே தங்கமயிலும் லூசுத்தனமாக ஏதாவது பேசி காரியத்தை குழப்பி அனைவரையும் காயப்படுத்தும் அளவிற்கு நடந்து கொள்கிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!