தோட்டக் கலை

ஜீவாமிர்தம் கரைசல் தயாரிக்கும் முறை..!

ஜீவாமிர்தம் என்றால் என்ன?

ஜீவாமிர்தம் செய்வது எப்படி.? இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியாக விளங்குவது ஜீவாமிர்தம். இந்த ஜீவாமிர்தத்தை  எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதையும், அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், எத்தனை நாட்கள் வரை பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த பகுதியில் நாம் காண்போம்.




ஜீவாமிர்தம் தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் தயாரிப்பு முறை...

ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை..!

தேவையான பொருட்கள்:

  1. நாட்டு மாட்டு சாணம் – 10 கிலோ

  2. தண்ணீர் – 180 லிட்டர்

  3. நாட்டு மாட்டு கோமியம் – 10 லிட்டர்

  4. நாட்டு சர்க்கரை  – 1 கிலோ

  5. சிறு தானிய பயிர் மாவு – 2 கிலோ

  6. வரப்பு மண் – 1 கிலோ

  7. 200 லிட்டர் தண்ணீர் கொள்ளும் – வாலி ஒன்று




செய்முறை:

200 லிட்டர் தண்ணீர் கொள்ளும் ஒரு வாலியை எடுத்து கொள்ளவும். அவற்றில் புதிய நாட்டு மாட்டு சாணத்தை சேர்த்து 20 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றில் 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்தை ஊற்றி நன்றாக கலந்து விடவும். (குறிப்பாக கோமியம் பழையதாக இருந்தால் மிகவும் சிறந்தது)

பிறகு நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின் சிறுதானிய பயிர் மாவு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். (குறிப்பாக கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கைகளால் கரைத்து விடவும்)




ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி? - How to prepare Jivamirtham?

இதை தொடர்ந்து 1 கிலோ இரசாயனம் சேர்க்காத வரப்பு மண்ணை கலந்து விடவும்.

அவ்வளவு தான் ஜீவாமிர்தம் தயாராகிவிட்டது. இவற்றை மூன்று நாட்கள் வரை நிழல் பகுதியில் வைத்து காற்று புகாத அளவிற்கு மூடி வைக்கவும்.

மூன்று நாட்களுக்கு பிறகு இந்த ஜீவாமிர்தத்தை பாசன நீரில் கலந்து விடலாம் அல்லது பயிர்களின் மீதும் தெளித்து விடலாம்.

இந்த ஜீவாமிர்தத்தை 7 நாட்கள் வரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம், அதற்கு மேல் பயன்படுத்த கூடாது.

அதேபோல் இந்த கலவையை தினமும் மூன்று வேளையும் ஒரு குச்சியை கொண்டு வலது புறமாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஜீவாமிர்தம் பயன்கள்:

ஜீவாமிர்தத்தை அனைத்து வகை பயிர்களுக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

ஜீவாமிர்தத்தை நேரடியாக பயிர்கள் மீது தெளிக்க கூடாது. ஜீவாமிர்த கரைசலை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.




ஜீவமிர்தத்தை தொடர்ந்து பயிர்களுக்கு பயன்படுத்தி வந்தால் நிலத்தில் மண்புழு எண்ணிக்கையை அதிகரிக்கும், அதாவது இனப்பெருக்கம் செய்யும். இதனால் மண் மிகவும் மென்மையாக இருக்கும்.

ஜீவாமிர்தக்கரைசலை வயலில் விடும்போது. 15 அடி ஆழத்திற்கு கீழ் இருக்கும் மண்புழுக்கள் துள்ளி எழுந்து, மண்ணை கிளறிக்கொண்டு மேல் வந்துவிடும். இதனால் மண்ணின் வளம் பல மடங்கு பெருகும்.

விதைநேர்த்தி செய்ய ஜீவாமிர்தம் மிகவும் உகந்ததாகும். விதைநேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

ஜீவாமிர்தம் தெளிப்பதால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.

ஜீவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!