Cinema Entertainment

செந்தில் காம்போ இல்லாமல் கவுண்டமணி ஜெயித்து காட்டிய படங்கள்!

டாம் அண்ட் ஜெர்ரிக்கு பிறகு பேமஸான காமெடி ஜோடி என்றால் அது கவுண்டமணி செந்தில் தான். இவர்களுடைய காமெடி காம்போவில் பல காட்சிகளை இன்று வரை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. செந்திலை மட்டம் தட்டி, அடித்து உதைத்து தான் கவுண்டமணிக்கு காமெடி செய்ய தெரியும் என அவ்வப்போது சில பேர் சலசலப்பது உண்டு.

கவுண்டமணி – செந்தில் பிரிந்தது இதனால்தான்!. சோலோவா கெத்து காட்டிய கவுண்ட்டர் மன்னன்.. - CineReporters

அது எல்லாத்திற்கும் பதிலடியாக இந்த செய்தியில் வரும் 5 படங்களை சொல்லலாம். செந்தில் காம்போ இல்லாமல் அதே எனர்ஜியோடு கவுண்டமணி சிரிக்க வைத்திருப்பார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.




செந்தில் இல்லாமல் கவுண்டமணி ஜெயித்து காட்டிய 5 காமெடி டிராக்குகள்

காதலர் தினம்: மும்பையில் உள்ள பெரிய கல்லூரியின் பேராசிரியர் ஜாக் கேரக்டர் தான் கவுண்டமணிக்கு. அவர் கிளாஸ் எடுக்கும் வகுப்பில் இருக்கும் மாணவர் சின்னி ஜெயந்த் வாத்தியாரை கவுக்க டயானா என்னும் பெயரில் மெயில் ஐடி ஒன்றை ஓபன் செய்து கவுண்டமணிக்கு மெயில் அனுப்புவார். இப்போதைய பேக் ஐடி பற்றி அப்போவே கணித்து காமெடி காட்சி வைத்திருக்கிறார்கள். டயானா பேக் ஐடி என்று தெரியாமல் கவுண்டமணியும் மெயில் மூலம் டயானாவை உருகி உருகி காதலிப்பார். கவுண்டமணி கீ போர்டில் டைப் பண்ணும் ஸ்டைல்தான் இந்த காமெடிக்கு பெரிய பாசிட்டிவ். அன்பே டயானா என கை முட்டிகளை வைத்து டைப் பண்ணுவது எல்லாம் பயங்கர அட்ராசிட்டி.

ரஜினியால் சிரிப்பை அடக்கவே முடியல… மன்னன் படம் குறித்து ட்விட் போட்ட " கவுண்டமணி"! | Goundamani tweet about Mannan movie! - Tamil Filmibeat

மன்னன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காமெடி காட்சிகளில் பெரிய காமெடியன்ஸ்களுக்கே போட்டியாக இருப்பவர். அவரும், கவுண்டமணியும் இணைந்து மன்னன் படத்தில் செய்த காமெடி காட்சிகள் இன்று வரை மறக்க முடியாது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது மனோரமா அசைவ உணவை பற்றி பேசும் காட்சியில் கவுண்டமணி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.’ அதிலும் நாங்கள் ஆவது உங்க கிட்ட சொல்லிட்டு வந்தோம், நீங்க என்ன எங்க கிட்ட சொல்லிட்டா வந்தீங்க’ என்ற வசனம் எல்லாம் அல்டிமேட்.




Oru romantic look kudunga - WhatsApp Status Video

மேட்டுக்குடி: கார்த்திக் மற்றும் கவுண்டமணி காம்போ எப்போதுமே நகைச்சுவைக்கு பஞ்சம் வைக்காது. உள்ளத்தை அள்ளித்தா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படம் தான் மேட்டுக்குடி. இந்த படத்தில் ஹீரோயின் ரம்பாவின் தாய் மாமாவாக கவுண்டமணி நடித்திருப்பார். நக்மாவை கரெக்ட் பண்ண கார்த்திக்கிடம் ஐடியா கேட்கும் காட்சிகள் எல்லாம் பயங்கர காமெடியாக இருக்கும். அதிலும் அந்த லவ் லெட்டர் எழுதும்போது ‘ எங்க அக்கா மகளே இந்து’ என சொல்லும் வசனம் இன்று வரை பேமஸ்.

Goundamani comedy Singaravelan watch online | Watch online

சிங்காரவேலன்: கமல் மற்றும் கவுண்டமணி பெரிதாக நிறைய படங்களில் சேர்ந்து பணியாற்றவில்லை. ஆனால் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து இன்னும் நிறைய படம் பண்ணியிருக்கலாமே என சிங்காரவேலன் படத்தை பார்க்கும் போது தோன்றும். கிராமத்திலிருந்து தன் உறவுக்கார பெண்ணை தேடி வரும் கமல் சென்னையில் இருக்கும் தன் நண்பனுடன் சேர்ந்து தாங்குவார். அந்த நண்பரின் ரூமில் வசிக்கும் மற்ற நண்பர்கள் கேரக்டரில் கவுண்டமணி மற்றும் வடிவேலு பட்டையை கிளப்பி இருப்பார்கள்.

சத்தியராஜ் சொன்ன வசனம்!.. பேச மறுத்த கவுண்டமணி!.. நடிகன் படத்தில் நடந்த கலாட்டா!… - CineReporters

நடிகன்: சத்யராஜ் மற்றும் கவுண்டமணி காம்போ என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் என்றால் நடிகன். வயதான கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ் மற்றும் மனோரமா உடன் இணைந்து காமெடியில் சாகசம் பண்ணி இருப்பார் கவுண்டமணி. அதிலும் மனோரமாவே பேபிமா என்ன கூப்பிடும் சீன்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!