Cinema

சூரியை பற்றி கருடன் விழாவில் சசிகுமார் கலகல பேச்சு!

நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கருடன். இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார், துரை செந்தில்குமார் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும்,  சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ் மீட்டிங் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டு பேசுகையில்,  டைரக்டர் சக்சஸ் மீட்டிங் என்று சொன்னார். சக்சஸ் மீட்டிங் என்று சொல்லாதீர்கள், நன்றி மீட்டிங் என்று சொல்லுங்கள்.

ஏனென்றால், சக்சஸ் மீட்டிங் வைத்தால் படம் சரியாக ஓடாது என்று சொல்கிறார்கள். ஓடாத படத்திற்குதான் சக்சஸ் மீட்டிங் வைப்பார்கள் என்கிறார்கள். அது ஏனென்றால், ஒரு பயம். தோல்வி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடுகிறது.




தோல்வியை ஒத்துக் கொள்ளமாட்டேன் என்கிறார்கள். ஒத்துக்க வேண்டும். அதை ஒத்துக்கொண்டால்தான் அடுத்த படத்தில் வெற்றி பெற முடியும். தோல்வியை ஒத்துக் கொண்டால்தால் தான் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியும். இப்ப நன்றி என்று மாற்றிவிட்டார்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளது. சூரிக்காக இந்த படத்தில் நடிக்க வந்தேன். ஒரு நல்லது பண்ண வந்தேன். அது இப்ப எனக்கு நல்லதாகி விட்டது.

இனி யாரும் அவரை புரோட்ட சூரி என்று சொல்லமாட்டார்கள். அதையெல்லம் அழித்துவிட்டார். கதையின் நாயகனாகதான் இருப்பார். கதையின் நாயகனாக இருக்கும் வரை அவர் ஜெயித்துகொண்டே இருப்பார் என்று அவர் கூறினார்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!