lifestyles

சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு வைட்டமின் E கேப்சூல்: உண்மையிலேயே ஆரோக்கியத்திற்கு நல்லதா?

வைட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்தாகும். இது ஆக்சிஜனேற்றப் பண்புகளுக்குப் பெயர் பெற்றது. சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் விட்டமின் E கேப்சூல் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையிலேயே இத்தகைய பராமரிப்புகளுக்கு உதவியாக இருக்கிறதா என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.




வைட்டமின் ஈ ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது ஃப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சரும மற்றும் முடி செல்களை பாதுகாக்க உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல் என்பது உடலில் உள்ள நிலையற்ற மூலக்கூறுகள். அவை முன்கூட்டியே வயதான தோற்றம் மற்றும் ஆரோக்கியமான செல்களில் சேதத்தை விளைவிக்கும். இத்தகைய ஃப்ரீரேட்டிகல்களை நடுநிலையாக்கி சரும மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிக்க விட்டமின் ஈ உதவுகிறது.

வைட்டமின் ஈ, சருமம் மற்றும் முடி ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஈரப்பதத்தை தக்க வைத்து, வறட்சியைத் தடுத்து நீரேற்றத்தை ஊக்குவிக்க உதவும். இதை மேற்பூச்சாக பயன்படுத்தும்போது அல்லது நேரடியாக உட்கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தி வறட்சியைக் குறைக்கிறது. இதனால் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் தோன்றும். அதேபோல விட்டமின் ஈ முடியை சீரமைக்கவும், வரட்சி ஆகியவற்றைக் குறைக்கவும் உதவும்.

விட்டமின் ஈ, காயத்தை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டெடுப்பதாக நம்பப்படுகிறது. இதை மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் காயங்கள், சிறிய தீக்காயங்கள் மற்றும் வடுக்கல் ஆகியவை விரைவாக குணமடையும். மேலும், விட்டமின் ஈ முகத்தில் தடவினால் சூரியனின் புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்கும். முழுமையான சூரிய பாதுகாப்பிற்கு விட்டமின் ஈ போதுமானதாக இருக்காது என்றாலும், சன் ஸ்கிரீனுக்கு அடுத்த கட்ட பாதுகாப்பை இதனால் வழங்க முடியும்.




வைட்டமின் ஈ ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.‌ இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால், கால்கள் ஊட்டம் பெற்று அடர்த்தியான மற்றும் வலுவான முடி வளர்ச்சியைத் தூண்டும். இது உச்சந்தலையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுவதால், முடி உதிர்தல் மற்றும் முடி மெலிந்து போதல் போன்றவை தடுக்கப்படுகிறது.

இப்படி சரும மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை விட்டமின் ஈ கேப்சூல் பயன்பாடு வழங்குகிறது. இருப்பினும் ஒவ்வொரு தனி நபருக்கும் இதிலிருந்து கிடைக்கும் முடிவுகள் மாறுபடலாம். விட்டமின் ஈ-யின் செயல்திறன் என்பது ஒரு நபரின் உணவுமுறை வாழ்க்கைமுறை மற்றும் ஏற்கனவே உள்ள சருமம் அல்லது முடி நிலைகளைப் பொறுத்து மாறுபடும். எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு விட்டமின் ஈ கேப்ஸ்யூலின் சாதகமான விளைவுகளை உங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!