Cinema Entertainment

சரத்குமாருக்கு எதிராக தனுஷ் வீட்டிலிருந்து வந்த வழக்கு..

ஊர்ல யாருக்காவது பிரச்சனைனா நாட்டாமை கிட்ட போய் பஞ்சாயத்து பண்ணலாம். ஆனால் நாட்டாமைக்கு எதிராகவே பஞ்சாயத்து கூடினா என்னதான் பண்ண முடியும். நடிகர் சரத்குமாருக்கு இது கெட்ட காலம் போல. தொடர்ந்து அவர் மீது சில சர்ச்சையான கருத்துக்கள் எழுந்து கொண்டு தான் வருகிறது.




ஒட்டுமொத்த தமிழக மக்களும் பாஜக கட்சிக்கு எதிராக இருக்கும்போது, அசால்டாக தன்னுடைய கட்சியை பாஜகவுடன் இணைத்து மனைவியை எம்பியாக பதவி ஏற்க வைக்க துடியாக துடித்துக் கொண்டிருந்தார். தேர்தலில் தோல்வியை தழுவியதும் குடும்பத்துடன் மகள் வரலட்சுமி கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுப்பதற்கு கிளம்பிவிட்டார்.

தனுஷ் வீட்டிலிருந்து பாய்ந்த வழக்கு

இந்த சைடு கேப்பில் நடிகர் தனுஷின் அம்மா விஜயலட்சுமி கஸ்தூரிராஜா சரத்குமார் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். அட நடிகர்களுக்குள்ள பிரச்சனைனா உங்க சங்கத்திலேயே பேசி தீர்த்துக்க வேண்டியது தானே என நமக்கும் தோன்ற தான் செய்கிறது.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் மற்றும் ராதிகா இருவருக்கும் இடையே நல்ல நட்பும் இருந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் எதற்காக இப்படி ஒரு வழக்கு என என்று பார்த்தால் விஷயம் ரொம்ப சட்ட சிக்கலாக தான் இருக்கிறது.




சென்னை தி.நகரில் உள்ள ராஜமன்னார் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தான் தனுஷின் அப்பா அம்மா வசித்து வருகிறார்கள். அதே அப்பார்ட்மெண்டில் தான் சரத்குமார் மற்றும் ராதிகா இருக்கிறார்கள்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பின் பொதுவான மேல் தளத்தை சரத்குமார் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் மற்ற குடியிருப்பு வாசிகளை பயன்படுத்த விடுவது இல்லையாம். அதே போன்று கீழே உள்ள பொது தளத்திலும் தன்னுடைய நிறுவனத்தின் வேலைகளுக்காக வணிக ரீதியாக சரத்குமார் உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கிறாராம்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தனுஷின் அம்மா மற்றும் ஒரு சில குடியிருப்பு வார்த்தைகள் இணைந்து சென்னை ஐகோர்ட்டில் சரத்குமாருக்கு எதிராக வழக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. தற்போது சரத்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி இந்த வழக்கில் பதில் சொல்ல வேண்டுமென ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!