Cinema Entertainment

சன் நிறுவனம் வைத்த கோரிக்கை..நோ சொன்ன தளபதி விஜய்..

விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் தான் இப்படத்திலிருந்து சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் வெளியானது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து விசில் போடு என்ற பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இப்பாடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இவ்விரு பாடல்களையும் விஜய் தான் பாடியிருக்கிறார். ஒருபக்கம் பாடல் நன்றாக இருப்பதாக பலர் கூறினாலும், எதிர்பார்த்த அளவிற்கு இப்பாடல்கள் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதெல்லாம் ஒருபக்கம் இருக்கையில் இப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் பற்றிய ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் விற்காமல் இருந்து வந்தது. இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை மிகப்பெரிய தொகைக்கு சன் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் அவர்கள் திடீரென பின்வாங்கினார்கள். இதற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தார்கள்.




அதன் பிறகு தான் GOAT திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் சன் நிறுவனம் ஏன் GOAT படத்தை வாங்கவில்லை என தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. GOAT படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை சன் நிறுவனம் வாங்க ஒப்புக்கொண்டது. ஆனால் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கின்றது.

விஜய் சன் டிவிக்கு பேட்டி கொடுக்கவேண்டும், அப்படி பேட்டி கொடுத்தால் GOAT படத்தின் சாட்டிலைட் உரிமையை நாங்கள் வாங்கிக்கொள்வதாக சன் நிறுவனம் கூறியதாம். ஆனால் விஜய் இதற்கு உடனடியாக நோ சொல்லிவிட்டாராம். இதன் காரணமாக தான் சன் நிறுவனம் GOAT படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கவில்லை என தெரிகின்றது.

ஆனால் இத்தகவல் உண்மையா ? இல்லை வதந்தியா ? என உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தது. அப்போது விஜய் சன் டிவிகாக்க ஒரு பேட்டி கொடுத்தார். பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவி பேட்டியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!