Cinema Entertainment

கோபி கொடுத்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த நடக்கப்போவது இது தான்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இரண்டு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு இன்று மாலை ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீரியலில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் டைனிங் டேபிள் அருகே ஈஸ்வரி நின்று கொண்டு இருக்க ராதிகா தவறுதலாக சிறிய பூத்தொட்டி மீது காலை வைத்து கீழே விழுக வயிற்றில் அடிபடுகிறது.




பிறகு அவரை ஹாஸ்பிட்டலில் அனுமதிக்க கருக்கலைந்து விட்டதாக டாக்டர் அதிர்ச்சி தருகிறார். என்னை புடிச்சு தள்ளுனது உங்க அம்மா தான் என்று ராதிகா சொல்கிறார். இந்த குழந்தை வேண்டாம்னு சொல்லி இப்போ குழந்தையே இல்லாம போயிடுச்சு என்று அழுகிறார்.

நான் எதுவும் பண்ணல என்று ஈஸ்வரி சொல்ல நீங்க சொன்ன மாதிரியே நடந்துடுச்சு என்று கோபி அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் மொத்தமாக உடையும் ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து கரு கலைந்து போன விஷயத்தை சொல்கிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!