Samayalarai

குழந்தைககளுக்கு மிகவும் பிடித்த தேங்காய் பால் கப்கேக்

பள்ளி முடிந்து  குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும், நிச்சயம் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதுவும் மாலை வேளை என்றாலே சமையலறையைத் தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். அதிலும் பெரும்பாலான குழந்தைகள் இனிப்பு வகைகள் மற்றும் கேக்கை விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வரிசையில் வீட்டில் தேங்காய் இருந்தால், அதைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு கப்கேக் செய்து கொடுக்கலாம். சுவையான தேங்காய் பால் கப்கேக் செய்வது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.




தேங்காய் பால் கப்கேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • துருவிய தேங்காய் – ஒரு கப்
  • இரண்டு ஏலக்காய்
  • தண்ணீர் – இரண்டு கப்
  • வெல்லம் – ஒரு கப்
  • கோதுமை மாவு – ஒரு கப்
  • அரிசி மாவு – 3/4 கப்
  • நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • முந்திரி – சிறிதளவு
  • உலர் திராட்சை – சிறிதளவு
  • உப்பு – இரண்டு சிட்டிகை
  • ஆப்ப சோடா – கால் டேபிள் ஸ்பூன்




சுவையான தேங்காய் பால் கப்கேக் செய்வது எப்படி?

coconutmilk cupcake big

  • முதலில் ஒரு மிக்சர் ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காயை எடுத்து, அதில் இரண்டு ஏலக்காய் சேர்த்து அத்துடன் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  • இதற்குப் பிறகு அரைத்த தேங்காயை வடிகட்டி தேங்காய் பாலை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய கடாயில் வெள்ளத்தை சேர்த்து அதில் தேங்காய் பாலை ஊற்றி வெல்லம் கரையும் வரை நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இந்த தேங்காய் பாலை கொதிக்க விட வேண்டாம், ஏனென்றால் தேங்காய் பால் கொதித்து வந்தால் திரிந்துவிடும். தேங்காய் பால் சூடாகி வெல்லம் கரைந்த பிறகு அடுப்பை அணைத்து இறக்கி விடுங்கள்.
  • இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு குளிர்ந்த தேங்காய் பாலை வடிகட்டி இந்த மாவில் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி அந்த நெய் சூடானதும் தேவையான அளவு முந்திரி உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
  • அதில் பாதியை மாவுடன் சேர்த்து கிளற வேண்டும் மீதி முந்திரி பருப்பை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து அந்த மாவில் சிறிதளவு உப்பு மற்றும் ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • இப்போது சிறிய கிண்ணங்களை எடுத்து வைத்து அந்த கிண்ணங்களில் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி நாம் தயாரித்து வைத்த தேங்காய் பால் கலவையை ஊற்ற வேண்டும்.
  • இறுதியாக இந்த சிறிய கிண்ணங்களை ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். இது குறைந்தது பத்து நிமிடம் வேக வைத்தால் போதுமானது.
  • பத்து நிமிடம் பிறகு ஒரு கத்தியை கொண்டு அந்த கிண்ணத்தில் கேக்கின் முனைகளை கீறி விட்டு எடுத்து, மீதம் உள்ள முந்திரி பருப்புகளை தூவினால் சுவையான தேங்காய் பால் கப் கேக் ரெடி.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!