Cinema Entertainment

குக்கு வித்து கோமாளிடம் தோற்று போன சன் டிவி

 நீயா நானா என்ற போட்டியில் எல்லா இடங்களிலும் நடப்பது சகஜம் தான். அதே மாதிரி ஒவ்வொரு சேனல்களும் முதலிடத்தில் வருவதற்கு போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி அடுத்தடுத்து இடத்தைப் பிடித்து முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். அதிலும் சன் டிவி தான் சீரியலின் சிம்மாசனம் என்று சொல்லும் அளவிற்கு ஒய்யாரத்தில் இருக்கிறது.

ஆனால் விஜய் டிவி நடத்தி வரும் ரியாலிட்டி ஷோ மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்களின் பேவரைட் ஆக இடம் பிடித்திருக்கிறது. அதிலும் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடமிருந்து ஏகபோக வரவேற்பு கிடைத்துவிடும். அப்படிப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றதற்கு முக்கிய காரணம் வெங்கட் பட் மற்றும் செப் தாமு.




சமாளிக்க முடியாமல் திணறி  வரும் வெங்கட் பட்

ஆனால் தற்போது ஆரம்பிக்கப்பட்ட சீசன் 5 நிகழ்ச்சியில் வெங்கட் பட் கலந்து கொள்ளாமல் சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு விஜய் டிவியில் இருந்து மீடியா மேசன் விலகிக் கொண்டதால் சன் டிவியில் சேர்ந்து கொண்டு வெங்கட் பட்டை இழுத்துக் கொண்டார்கள். வெங்கட் பட்டு மீடியா மேசன் மீது இருந்த நன்றி கடனுக்காக சன் டிவியை ஒன் மேன் ஆர்மியாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இவரை தொடர்ந்து பல கோமாளிகள் சன் டிவிக்கு தாவி விட்டார்கள். ஆனாலும் வெங்கட் பட்டால் தனியாக கொண்டு போவதில் கொஞ்சம் சிரமப்பட்டு வருகிறார். அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களில் ஒளிபரப்பாக முடியாமல் ஞாயிறு மற்றும் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜய் டிவியில் வெங்கட் பட் இல்லை என்று ஆரம்பத்தில் துவண்டு போயிருந்த ரசிகர்கள் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் கலாட்டாவை பார்க்க மிஸ் பண்ணுவதே இல்லை. என்ன இருந்தாலும் குக் வித் கோமாளி காமெடி கலாட்டா என்றால் அது விஜய் டிவி தான் என்று மக்கள் மனதிற்குள் பதிந்து விட்டது. அதனால் யார் நினைத்தாலும் அந்த இடத்திற்கு வர முடியாது என்பதற்கு ஏற்ப டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி குக் வித் கோமாளி வெற்றி நடை போட்டு வருகிறது.




What’s your Reaction?
+1
4
+1
13
+1
1
+1
3
+1
1
+1
4
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!