Cinema Entertainment

காதல் கதை குறித்து மனம் திறந்த கார்த்திகை தீபம் சீரியல் நடிகை!

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவுக்கு அண்மையில் காதல் திருமணம் நடைபெற்றது. அவரின் கணவர் குறித்து எந்த தகவலும் யாருக்கும் தெரியாத நிலையில், அர்த்திகாவின் கணவர் குறித்தும் அவர்களின் காதல் கதை குறித்தும் முதன்முறையாக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்கள் காதலித்த போது எதிர்கொண்ட பிரச்சனைகளை பற்றி கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அர்த்திகா பிளாக் அண்ட் வொயிட் படத்தில் கார்த்திக்குடன் சேர்ந்து நடித்ததைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை அர்த்திகாவிற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.




நடிகை அர்த்திகா: விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், ரியா, ரம்யா என புதுபுது கதாபாத்திரங்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். தற்போது, தீபா மற்றும் கார்த்திக்கை பிரிக்க ரம்யா பல வகையில் சதி செய்து வருகிறாள்.TRP ரேட்டிங்கில் இந்த சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில் தீபா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் அர்த்திகா. மேலும், கார்த்திக் ராஜ் மற்றும் அர்த்திகாவின் ரொமான்ஸ் மற்றும் காதல் காட்சிகளை பார்க்கவே ரொம்ப அழக இருக்கும்.

கடையில் வேலை பார்த்தேன்: நடிகை அர்த்திகாவிற்கு அண்மையில் திருமணமான நிலையில்,யூடியூப் சேனல் ஒன்றுக்கு முதன்முறையாக தனது கணவருடன் சேர்ந்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தங்களின் காதல் கதை குறித்து கூறியுள்ளார். அதில், என் ஊர் கோட்டையம், அவரின் ஊர் கண்ணூர், டிசைனிங்கிற்காக எங்க ஊருக்கு வந்தார். நான் சினிமாவிற்கு வருவதற்கு முன் ஒரு கடையில் வேலைப்பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது என் கடைக்கு அடிக்கடி வருவார். அப்படித்தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.




மனதில் காதல் இருந்தது: நாங்கள் நண்பர்களாக இருக்கும்போதே,எனக்கு இவர் மேல் காதல் இருந்தது. ஆனால், நான் வெளியில் சொல்வில்லை. அப்போது ஒரு நாள் இவர், வேறு ஒரு பெண்ணிடம் லவ்வை சொல்லுவது போல வாட்ஸ் அப்பில் ஆடியோவை அனுப்பி இருந்தார். அப்போது எனக்கு கோவம் வந்து இவருடைய நம்பரை பிளாக் செய்துவிட்டேன். அதன்பிறகு பலமுறை போன் பண்ணி மன்னிப்பு கேட்டார். அப்போது தான், இருவரும் மனதிற்குள் காதலிப்பதை தெரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பித்தோம்.

பிரிய முடிவு செய்தோம்: நான் கிறிஸ்டியன் அவர் இந்து இதனால் எங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தது. என் குடும்பத்தில் அவரை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவர் குடும்பத்தில் பெரிய பிரச்சனை நடந்தது. இதனால், காதல் எல்லாம் வேண்டாம், குடும்பம் தான் முக்கியம், குடும்பத்தை மீறி திருமணம் செய்ய முடியாது என்பதால், பிரிய முடிவு எடுத்து, போன் நம்பரை பிளாக்கில் போட்டோம். அந்த நேரத்தில் அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு எல்லாம் சென்றார். அதன்பிறகு தான் வீட்டில் பேசி இருவரும் திருமணம் செய்து கொண்டாம்.

பணம் பெயர் தேவையில்ல: தொடர்ந்த பேசிய அவர், சினிமாவில் பெரிய இடத்திற்கு வர எது வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. எனக்கு கடவுள் கொடுத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நான் மதிக்கிறேன். இந்த வாழ்க்கையில், நான் மகிழ்ச்சியாக இருந்தால், போதும் அதற்கு பணம் தேவையில்லை, பெயர் தேவையில்லை நாம் நாமாக இருந்தால் போதும். நடிகர்கள் மட்டும் தான் இந்த உலகத்துல இருக்காங்களா? பலரும் பல வேலைகளை செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் அனைத்து வேலையையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறேன். சினிமாவில் இருந்தால் மட்டும் தான் என்னால் ஜெயிக்க முடியும் என்பது இல்லை என்றார்.

மோசமான கமெண்ட்: பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலர் இன்ஸ்டாகிராமில் மோசமான வீடியோக்களை போடுகிறார்கள். இதைப்பார்த்து பத்து பேர் நல்லா இருக்கு என்று சொல்லி இருந்தாலும், மற்றவர் இந்த பெண்ணு நல்ல பெண்ணே இல்ல, பல பேர் கூட போய் இருப்பா என்று கமெண்ட் செய்வார்கள். இதனால், பிரபலமாவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடாது என்றார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!