Cinema Entertainment

கல்கி 2898 AD படத்தின் மாஸ் அப்டேட்!

நாடெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கல்கி 2898 AD படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் கல்கி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். இது சூப்பர் ஹீரோ படமாக அதிக பட்ஜட்டில் உருவாகி வருகிறது என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.




கலியுகத்தில் கிருஷ்ணன் அவதாரத்தைத் தழுவியும் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக செய்திகள் வந்தன. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக இப்படம் இந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில்தான் படத்தின் பாடல் காட்சிகளும் விட்டுப்போன சில காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டன. இந்தப் படப்பிடிப்பிற்காகப் படக்குழு இத்தாலி சென்று வந்தது. படப்பிடிப்பு ஒருபக்கமும் மறுபக்கம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்தன. இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி சமீபக்காலமாக பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருவழியாக ஜூன் 27ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஜூன் 10, 2024 அன்று ட்ரைலர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




டிரெய்லர் வெளியீட்டு தேதி, சுவாரஸ்யமான ஒரு புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. அந்த போஸ்டரில், ஒரு மலையின் உச்சியில் பிரபாஸ் நிற்கிறார், “எல்லாம் மாறப்போகிறது” என்ற வாசகம் அதில் உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி கவனம் பெற்று வருகிறது.

மேலும் கூடுதல் சிறப்பாக இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kalki 2898
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!