Cinema Entertainment

‘கல்கி’! விமர்சனத்தையும் தாண்டி என்னெல்லாம் இருக்கு பாருங்க

 சமீபத்தில் வெளியான திரைப்படம் கல்கி. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல், தீபிகா படுகோன் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஒரு பேன் இந்தியா படமாக வெளியான கல்கி திரைப்படம் தமிழ் ஆடியன்ஸை திருப்தி படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.

kalki (1)

அது இந்த படத்தில் நடந்திருக்கிறது. அதாவது அஸ்வத்தாமா என்ற ஒரு கேரக்டரை வைத்து தான் இந்த படமே நகர்ந்து இருக்கிறது. அதுவும் அந்த கேரக்டரில் நடித்த அமிதாப்பச்சன் அட்டகாசமாக அவருடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் ஹைலைட்டே அமிதாப்பச்சன் தான். அதுவும் படத்தின் முதல் பாதியில் முழுவதும் அமிதாப்பச்சன் தான் ஆக்கிரமித்து இருக்கிறார் .

கிட்டத்தட்ட 40 நிமிடத்திற்கு பிறகு தான் பிரபாஸே வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் முதல் பாகத்தின் கதாநாயகனே அமிதாப் என்றுதான் சொல்கிறார்கள். நம்முடைய மைத்தாலஜியை வைத்து பார்க்கும் பொழுது முக்கிய கேரக்டராக பேசப்பட்ட அஸ்வத்தாமா என்ற கேரக்டரை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு கதையை வைத்து 600 கோடி செலவில் எடுத்திருக்கிறார்கள் என்றால் அதையும் நாம் பார்க்க வேண்டும்.




ஆனால் தமிழுக்காக மெனக்கிடனும். தமிழ்ல ப்ரொமோட் பண்ணனும். தமிழ் ஆடியன்ஸ் மத்தியில் பெரிய அளவில் கொண்டு போக வேண்டும் என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. அவர்களுடைய டார்கெட் தெலுங்கு ஆடியன்ஸும் ஹிந்தி ஆடியன்ஸும் தான். அதை அவர்கள் வெற்றிகரமாக அடைந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதில் படக்குழுவில் இருந்து என்ன டிக்ளர் பண்ணியிருக்கிறார்கள் என்றால்  முதல் நாள் வசூல் 191.5 கோடி. இதுதான் இந்திய சினிமாவிலேயே ஒப்பனிங்கில் அதிக அளவு  கலெக்ஷன் செய்த படமாக கருதப்படுகிறது. இந்த அளவுக்கு ஹிந்தியிலும் ஆந்திராவிலும் வந்திருக்கிறது என்றால் அந்த அளவுக்கு அவர்கள் பெரிய ஹைப்பை அங்கே உருவாக்கியிருக்கிறார்கள் .

அதனால் தமிழில் எவ்வளவு வந்திருக்கிறது? 5 கோடியா இல்லை ஐந்தரை கோடியா என்பதெல்லாம் அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அவர்களைப் பொறுத்த வரைக்கும் தமிழில் மிகக் கம்மியான தொகையில் தான் படத்தை கொடுத்திருக்கிறார்கள். மொத்தமாக இந்த படம் 1000 கோடி வசூலிக்குமா? இல்ல 800 கோடி வசூலிக்குமா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் இந்த படத்தை பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது .அட்வான்ஸ்மென்ட் ஆப் சினிமா .அதாவது சினிமாவை அடுத்த கட்டம் கொண்டு போகிற ஒரு சினிமா தான் இந்த கல்கி. அதற்கான முயற்சி தான் இந்த படம். இப்படி ஒரு டெக்னாலஜிக்கல் அட்வான்ஸ்மென்ட் பண்ண முடியுமா? இவ்வளவு விஷயங்களை டெக்னாலஜி யூஸ் பண்ணி காட்ட முடியுமா?

ஃபைட் காட்சி செட் வொர்க் எதுவுமே ரியல் சென்டர் இல்லை. எல்லாமே அனிமேட்டட் கிராபிக்ஸில் உருவாக்கி செய்ததுதான். அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது. ஆனால் படத்தை பார்க்கும் பொழுது படத்தின் நீளம் நம்மை டயர்ட் ஆக்கினாலும் சில காட்சிகள் புரிய வைக்காமல் போனாலும் எப்படி இந்த மாதிரி ஒரு கதையை இயக்குனர் நாக் அஸ்வின் யோசித்தார் என்ற வகையில் தான் படம் பிரமிப்பாக இருக்கிறது என தனஞ்ஜெயன் கூறி இருக்கிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!