தோட்டக் கலை

ஓமவல்லி செடி வளர்ப்பு

நம்முடைய திட்டத்தில் பூச்செடிகள் மற்றும் காய்கறி செடியானது அதிகமாக இருக்கும். ஏனென்றால் தோட்டம் என்றாலே இவை இரண்டும் இல்லாமல் இருக்காது. அதிலும் ஒரு சிலர் தோட்டத்தில் அதிகமாக மருத்துவக்குணம் நிறைந்த செடிகளை தான் பராமரித்து வருவார்கள். ஏனென்றால் நமக்கு தேவைப்படும் பொருளை நாமே வளர்த்து வருவது என்பது மிகவும் நல்லது என்று யோசித்து அதற்கு ஏற்றவாறு செயல்படுவார்கள். இவ்வாறு பார்த்தால் அதிகமாக தூதுவளை, ஓமவல்லி அல்லது கற்பூரவள்ளி மற்றும் துளசி இலை என இவற்றை தான் அதிகமாக வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இதனை வளரக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட அதனை எப்படி பராமரித்து வளர்க்க வேண்டும் என்று தெரியாமலே இருக்கிறது. அதனால் இன்று மூலிகை செடிகளில் ஒன்றான ஓமவல்லி செடியினை வீட்டில் எவ்வாறு வேகமாகவும், செழிப்பாகவும் வளர செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

ஓமவல்லி செடி வேகமாக வளர டிப்ஸ்

ஓமவல்லி செடி வேகமாக வளர டிப்ஸ்:

முதலில் நீங்கள் ஓமவல்லி செடி வளருவதற்கு மண் கலவையை எடுத்துக்கொள்ளுங்கள். அதாவது கோகோபீட், மண்புழு உரம் இதை இரண்டையும் மண் கலவையாக செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு தொட்டியில் போதுமான அளவு மண் கலவையை நிரப்பி கொள்ளுங்கள்.




இப்போது மண் கலவை நிரப்பி வைத்துள்ள தொட்டியில் ஓமவல்லி செடி அல்லது கன்றை நடவு செய்து விடுங்கள். இத்தகைய செடியை மிதமான வெயில் இருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

நீங்கள் நடவு செய்து வைத்துள்ள ஓமவல்லி செடிக்கு பழக்கழிவு, காய்கறி கழிவு மற்றும் அரிசி கழுவிய தண்ணீர் என இவற்றை எல்லாம் வாரம் 1 முறை ஊற்றுங்கள். பின்பு 15 நாட்கள் கழித்து பார்த்தால் செடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து துளிர் விட ஆரம்பிக்கும்.

15 நாட்கள் கழித்து அடுத்த 25 நாட்களில் ஓமவல்லி செடியில் நிறைய இலைகள் வைக்க ஆரம்பித்து விடும். அதேபோல் வளர்ந்த செடியில் இருந்து மற்றொரு சிறிய துண்டை எடுத்து வேறு ஒரு தொட்டியில் வைத்தாலும் அது நன்றாக வளர ஆரம்பிக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!