lifestyles

உலக ‘டாப் 10 பணக்கார நடிகர்கள்’ பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் கடந்த 4 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. கடந்த  ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாக உள்ள ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையையும், நெகட்டிவ் விமர்சனங்களையும் குவித்தது. இதனிடையே, உலகிலேயே பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் 4வது இடம் பிடித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




குறிப்பாக டாம் குரூஸ், ஜாக்கி சான் போன்ற பிரபல ஹாலிவுட் ஸ்டார்களையே ஷாருக்கான் பின்னுக்குத்தள்ளியுள்ளார். டாப் 10 பணக்கார நடிகர்கள் யார்?

உலக அளவில் பிரபல மேகசினான ஃபோர்ப்ஸ் உலகிலேயே டாப் 10 பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜெர்ரி சீன் ஃபெல்ட் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு அமெரிக்க நடிகரான டைலர் பெர்ரி 1 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பிரபல குத்துசண்டை வீரராக இருந்து ஹாலிவுட் ஸ்டாராக வலம் வரும் ராக் டுவைன் ஜான்சன் 800 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் 770 மில்லியன், அதாவது, இந்திய மதிப்பில் 6300 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் உலகப் பணக்கார நடிகர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளார்.




இந்த டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் மட்டுமே ஆவார். ஹாலிவுட் சூப்பர் ஹீரோ டாம் குரூஸ் 620 மில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் டாப் 5 பணக்கார நடிகராக உள்ளார். உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஆக்‌ஷன் ஹீரோவான ஜாக்கி சான் 520 மில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் 6வது இடத்திலும், ஜார்ஜ் குளூனி 500 மில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் 7வது இடத்திலும் உள்ளனர். காட்பாதர் 2 திரைப்படம் மூலமாக உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நடிகரான ராபர்ட் டி நீரோ 500 மில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் 8வது இடத்திலும், பாடி பில்டர், விளம்பர மாடல், ஹாலிவுட் நடிகர், திரைப்பட இயக்குநர், தொழிலதிபர், அரசியல்வாதி என பன்முகத்தன்மையுடன் விளங்கும் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் 450 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் 9வது இடத்திலும், ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட் 450 மில்லியன் டாலர்கள் சொத்துக்களுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.

ஷாருக்கான் சொத்து விவரம்: ஷாருக்கான் படங்கள் மூலமாக மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள், தயாரிப்பு நிறுவனம், விளம்பரங்கள் மூலமாகவும் ஆண்டுக்கு கோடிகளில் சம்பாதித்து வருகிறார். ஷாருக்கானின் ஆண்டு வருமானம் 300 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தில் நடிக்க ஷாருக்கான் 120 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். பிக்பேஸ்கட், பைஜூஸ், பெயிண்ட், கார் மற்றும் பேங்க் உள்ளிட்ட 14 பிராண்ட்களை ஷாருக்கான் விளம்பரப்படுத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி, ஷாருக்கான் தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மூலமாகவும் கோடிகளில் லாபம் சம்பாதித்து வருகிறார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெறும் ’கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியின் உரிமையாளர் என்ற வகையிலும் ஷாருக்கான் கோடிகளில் லாபம் பார்த்து வருகிறார். உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் 2019 வரை முதல் 13வது இடத்தில் இருந்த ஷாருக்கான், 2019க்கு பிறகு ஆறாவது இடத்திற்கு முன்னேறினார். கடந்த 5 ஆண்டுகளாக இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகாவிட்டாலும், தற்போது 4வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!