Cinema Entertainment

இளையராஜா – கவிப்பேரரசு வைரமுத்து மோதலில், பாடல் மூலம் சவால் விட்ட வைரமுத்து

இசையமைப்பாளர் இளையராஜா – கவிப்பேரரசு வைரமுத்து ஆகிய இருவரும் பிரிந்தபின், இளையராஜா மற்ற கவிஞர்களுடன் இணைந்து தனது பெயரான ராஜா ராஜா என்று வரும் பாடலை உருவாக்கியதாகவும், அதற்கு வைரமுத்து ரஜினி பட பாடலில் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் இருக்கிறது. 




தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று போற்றப்படுவர் வைரமுத்து பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்கை கொடுத்துள்ள இவர்,  1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். 

இளையராஜா - வைரமுத்து கூட்டணி : ஆரம்பமும், முடி(றி)வும் | Ilayaraja - Vairamuthu Alliance: Beginning and End

அதன்பிறகு 1986-ஆம்  ஆண்டு வெளியான கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் தான் இவர்கள் கூட்டணியில் வெளியாக கடைசி படம் என்று சொல்லலாம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக இந்த படத்தில், அனைத்து பாடல்களையுமே வைரமுத்து தான் எழுதியிருந்தார். இவர்கள் இருவரும் இணைந்த கடைசி படம் புன்னகை மன்னன் தான் என்றாலும், இவர்கள் கூட்டணியில் வெளியான கடைசி பாடல், சிறைப் பறவை படத்தில் இடம் பெற்றுள்ளது. 




புன்னகை மன்னன் படத்திற்கு, இளையராஜா வைரமுத்து இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், அடுத்து இருவரும் தனித்தனியாக தங்களது வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளனர். இதில், மற்ற கவிஞர்களுடன் இணைந்த இளையராஜா, ராஜா என்று தொடங்கும் பல பாடல்களை வைரமுத்துவுக்கு எதிராக உருவாக்கியதாக அந்த காலத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த செய்தகிள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. 

இந்த நேரத்தில், கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. தேவா முதன் முதலாக ரஜினி படத்திற்கு இசையமைத்த அண்ணாமலை படத்தில் இடம்பெற்றுள்ளது அந்த பாடல். நண்பன் சரத்பாபுவிடம் ஏமார்ந்த ரஜினிகாந்த், தனது நண்பர் சரத்பாபுவிடம் சவால் விட்டு பேசுவது போன்று அந்த பாடல் எழுத வேண்டும் என்று சொல்ல, அதன்படி எழுதிய பாடல் தான், வெற்றி நிச்சயம். இது வேத சந்தியம் என்ற பாடல்.

இந்த பாடலில் வரும் ”அடேய் நண்பா உண்மை சொல்வேன், சவால் வேண்டாம் உன்னை வெல்வேல்” இந்த வரிகள் இளையராஜாவை தாக்கி எழுதியதாக இன்றுவரை அழைக்கப்படுகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய இந்த படல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். பிரிவுக்கு பின் வைரமுத்து இளையராஜாவுக்கு சவால் விட்ட பாடலாக இந்த பாடல் உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!