gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (28.06.24)

இன்று இரவு 08.50 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று மாலை 06.24 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று பிற்பகல் 13.24 வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி. பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Rasi palan Today Tamil 8th May 2022 ...

மேஷம்

உயரதிகாரிகளின் கோபத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள். குடும்பப் பிரச்சனைகளால் மனநிம்மதி இழப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் உற்சாகப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிரான நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் ஓரளவு பணம் பார்ப்பீர்கள். ஏற்றுமதி தொழிலில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்

வீண் செலவுகளை குறைத்து நிதி நிலைமையை சீர்படுத்துவீர்கள். மருந்து மாத்திரை எடுத்து முதுகு வலிக்கு தீர்வு காண்பீர்கள். கடுமையாக உழைத்து காதலியின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். விற்பனையில் அதிசயத்தக்க முன்னேற்றம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியலில் செல்வாக்கான இடத்தை பிடிப்பீர்கள்.




மிதுனம்

மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உற்பத்தியைப் பெருக்குவீர்கள். சிறு வியாபாரிகள் அதிக லாபம் அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை சீராக நடத்துவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் அதிக பலனடைவீர்கள். அலைச்சல் அதிகமானாலும் அதற்கேற்ற வருமானம் அடைவீர்கள். வேலைத் திறனால் முதலாளிகளின் பாராட்டைப் பெற்று பெருமிதம் கொள்வீர்கள்.

கடகம்

நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருப்பீர்கள். தேவையில்லாமல் கெட்ட பெயர்களைச் சம்பாதிக்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக கையாளவில்லை என்றால் பணத்தை இழப்பீர்கள். அலட்சியமாக கண்ட இடத்தில் பணத்தை வைக்காதீர்கள். பேச்சுவார்த்தையில் நிதானம் தவறாதீர்கள். சந்திராஷ்டம நாள் என்பதால் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள்.

சிம்மம்

வியாபாரத்தை விரிவுபடுத்த வீணாகச் செலவு செய்ய மாட்டீர்கள். உங்கள் மனதை காதலியிடம் சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துவீர்கள். கேட்ட இடத்தில் பணம் வர தாமதமாவதால் வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பீர்கள். வங்கி பரிவர்த்தனையில் சிக்கல்களை சந்திப்பீர்கள். உறவினர்களுக்கு அதிகம் செலவு செய்வீர்கள். உடல்நிலை பாதிப்புக்கு மருத்துவமனை செல்வீர்கள்.




கன்னி

வருமானம் போதிய அளவுக்கு வருவதால் குடும்பத் தேவைகளை பொறுப்பாக நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி உறவில் கலகலப்பை ஏற்படுத்துவீர்கள். வாகனம் ஓட்டும்போது சிறிய விபத்துக்கு ஆளாவீர்கள். உற்பத்தியை அதிகரித்து உற்சாகமடைவீர்கள். காலத்திற்கு ஏற்ற மாதிரி வியாபாரத்தை மாற்றுவீர்கள். அரசாங்க வேலை பார்ப்பவர்கள் அனுகூலம் அடைவீர்கள்.

துலாம்

வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். வேலைக்காக கடல்தாண்டிப் போக ஏற்பாடு செய்வீர்கள். கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் பணவரவில் முன்னேற்றம் காண்பீர்கள். தங்கம் வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். வியாபார உத்திகளால் லாபத்தைக் காண்பீர்கள். குடும்பப் பிரச்சனைகளால் மாணவர்கள் மனநிலை பாதிப்படைவீர்கள்.

விருச்சிகம்

அவசியமில்லாத செலவுகளால் அல்லல் படுவீர்கள். பணத்தின் மதிப்பை இந்தக் காலத்தில் நன்கு உணர்வீர்கள். ஏதாவது பிரச்சனை தோன்றி தொழிலில் இடையூறுகளை சந்திப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் பற்றிய பேச்சுவார்த்தையை நடத்துவீர்கள். கொடுத்த வாக்குறுதியை சிரமப்பட்டுக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்.




தனுசு

புத்திசாலித்தனத்தால் வருமானத்தை உயர்த்துவீர்கள். எந்தப் பிரச்சனையானாலும் சொந்த முயற்சியால் தாண்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெறுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை நடத்துவீர்கள். கடந்தகால நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியடைவீர்கள்.

மகரம்

வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை தடையின்றி பெறுவீர்கள். அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். அரசுத் துறை பணியாளர்கள் சிறப்பான பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவீர்கள். தொழிலில் தடை ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக விலக்குவீர்கள். கணவன் மனைவி இருவரும் அனுசரித்துப் போய் பழைய சண்டையை மறப்பீர்கள்.

கும்பம்

வீட்டிலும் வெளியிலும் புகழையும் செல்வாக்கையும் அதிகரிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமணத்திற்கான வரன்கள் தேடுவீர்கள். தொழிலுக்கு நண்பர்களின் ஆலோசனையை பெறுவீர்கள். பணம் தாராளமாகப் புழங்குவதால் சேமிப்பபை உயர்த்துவீர்கள். சகோதர வழிகளில் ஆதாயம் பெறுவீர்கள்.

மீனம்

எதிர்பார்த்தபடி தொழில் முன்னேற்றம் இல்லாததால் சங்கடப்படுவீர்கள். வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்வீர்கள். மனைவியின் கோபத்தால் மனம் உடைந்து போவீர்கள். கல்வியில் மாணவர்கள் கவனம் செலுத்தி ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்கள் டென்ஷனாகவே வேலை பார்ப்பீர்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!