gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (24.06.24)

சந்திரன் பகவான் தனுசு, மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் கூடிய தினம். இன்று தனுசு ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

இன்றைய ராசிபலன் ஜூன் 24, 2024, குரோதி வருடம் ஆனி 10, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு, மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள சேர்ந்த மிருகசிரீஷம், திருவாதிரை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வர வாய்ப்புள்ளது. இதனால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சில் கவனம் தேவை. சொந்த தொழில் செய்யக்கூடியவர்கள் முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. இல்லை எனில் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடமையாக உழைக்க வேண்டியிருக்கும்.




ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையுடன் வேடிக்கை, விருந்துகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முயற்சிகளில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சொத்து சம்பந்தமான வாக்குவாதங்கள் ஏற்படலாம். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். தந்தையின் ஆலோசனை நற்பலனை தரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்கள் புதிய திட்டங்கள் மூலம் நல்ல லாபத்தை அடையலாம். உங்களின் கடன் சுமை குறையும். பிள்ளைகளின் முழு ஆகவே பெறுவீர்கள். இன்று உங்கள் வேலை விஷயத்தில் எதிர்பாரினத்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். . அதனால் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் மனைவிக்காக பரிசு வாங்குவீர்கள்.




கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களின் பணம் அதிகமாக செலவாக வாய்ப்புள்ளது. குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். விரும்பிய பொருள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். குடும்பத்தில் செழிப்பு அதிகரிக்கும். காதல் துணையின் அன்பு மகிழ்ச்சியை தரும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு ஆதரவு பெருகும். இருப்பினும் இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும். மனதை இலேசாக வைத்திருக்கும் முயலவும். பணியிடத்தில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புத்திசாலித்தனமாக நீங்கள் எடுக்கக் கூடிய முடிவுகள் முன்னேற்றத்தை தரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது.




கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்திலும், பணியிடத்திலும் இருந்த சச்சரவுகள் தீரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்வீர்கள். வண்டி வாகன யோகம் உண்டு.. உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். முக்கிய முடிவுகளில் துணையின் ஆலோசனை பெறுவது அவசியம்.




துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களின் பொறுப்புகளும், முக்கியத்துவமும் அதிகரிக்கும். சில விஷயங்களில் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக நல்ல லாபத்தை பெறலாம். உங்களின் செல்வன் நிலை பெருகும். நிதிநிலையை சரியாக கையாள்வதும், சேமிப்பதும் அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிக்கு செல்ல வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பயணங்கள் நற்பலனை தரும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இன்று உங்களின் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிலருக்கு வயது தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். குழந்தையின் எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்படும்.




தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு உங்களின் தொழில், வியாபாரத்தில் இன்று புதிய திட்டங்கள் நல்ல பலன் அளிக்கும். எதிர்காலத்தில் அபரிவிதமான நிதி நன்மைகளை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உடன் பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும். உங்களின் நம்பிக்கையான செயல்பாடு நற்பலனை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடா அதிகரிக்கும். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பண பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்தவும். இன்று அதிர்ஷ்டம் பெரிய அளவில் சாதகமாக இருக்காது. உங்களின் நம்பிக்கை மற்றும் சரியான திட்டமிடல் நற்பலனை தரும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.. குடும்பம் தொடர்பான மனக்கவலை தொந்தரவு செய்யும். மாணவர்கள் படிப்பில் கடினமாக உழைக்க வேண்டிய நாள். குடும்பத் தொழிலில் பிறரின் ஆதரவு முன்னேற்றத்தைத் தரும்




கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று தடைப்பட்டு இருந்த வேலைகளை நிறைவேற்ற முடியும். வணிகத்தில் முன்னேற்றம் உண்டு. இன்று உங்களின் கருத்தை சிறப்பாக முன்வைப்பீர்கள். உங்களின் பேச்சுக்கு மரியாதை உண்டாகும். ஆன்மீக விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று பயணங்கள் நிகழ்ச்சியை அதிகரிக்கும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கக்கூடிய நாள். பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபடுவீர்கள். இன்று குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்லறிவை பெறுவீர்கள். இன்று உங்களின் உடல் நிலையில் சற்று குறை ஏற்படும். அதனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறரிடம் சிக்கி உள்ள பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளை கேட்பீர்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!