gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (17.06.24)

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கல்வி துறையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும். பண விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இன்று வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் துணையை புரிந்து கொண்டு செயல்படவும். நிதிநிலை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

 

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். இன்று உங்களின் தொழில் தொடர்பான கடின முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும், பேச்சைக் கட்டுப்படுத்துவது நல்லது, பணியிடத்தில் சிறப்பான வெற்றியை பெறலாம், அரசியலில் உள்ளவர்கள் ஆதாயம் அடைவார்கள். இன்று பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கேட்பீர்கள்.




மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கக்கூடிய நாள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். மாணவர்களின் எதிர்காலம் குறித்த முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப உறுப்பினர்களும் மூலம் எல்லாவிதமான ஆதரவும் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் சிறக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பழைய கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களின் முதலீடுகள் மூலம் லாபம் சிறப்பாக கிடைக்கும். மாணவர்கள் தேர்வு தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் தலைமையிலான எந்த ஒரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றத்திற்கான விவாதங்களில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் சாதக பலன் பெறுவீர்கள். இன்று உங்களின் செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். சொத்து தொடர்பான தகராறுகள் தீரும். வேலை வாய்ப்புகளில் முன்னேற்றமும், புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.




கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் இனிமையான நாளாக இருக்கும். மன மகிழ்ச்சி கிடைக்கும்.. இன்று வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும், அன்பும் கிடைக்கும். நிதி நிலையில் கவனம் தேவை. இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய வாய்ப்புகள் பெற்று மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் முக்கிய பிரச்சினை குறித்து விவாதிப்பீர்கள்..

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று உங்களின் வருமானம் மற்றும் செலவு இடையே சமநிலையை பராமரிப்பது அவசியம். காதல் தொடர்பான விஷயத்தில் டென்ஷன் அதிகரிக்கும்.




விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று இன்று உங்களின் கடன் பிரச்சனைகள் தீரும். வருமானம் உயரும். இன்று உங்களின் ஆடம்பரத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். கூட்டுத்தொழிலில், பங்குதாரர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்வீர்கள். இன்று உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சிலரிடம் கூட்டாக சேர்ந்து எந்த வேலை செய்தாலும் அதில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை. இன்று உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இன்று வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியம் தொடர்பான செய்திகள் கவனம் தேவை. எந்த விதமான முதலீட்டையும் தவிர்க்கவும்




மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பான விஷயத்தில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவை பெறுவீர்கள். இந்த வேலையில் புதிய திட்டங்களை செயல்படுத்த நல்ல பலனை பார்க்கலாம். குடும்பப் பொறுப்புகள் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். நண்பர்களுடன் பொழுதுபோக்கு விஷயத்தில் ஈடுபடுவீர்கள்.குடும்ப செலவுகள் அதிகரிக்கும்..

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தையின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் நல்ல முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை வாய்ப்புக்கான முயற்சிகள் பணம் வாய்ப்புகள் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்து விதமான சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். பொருளாதார ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வாழ்க்கைத் துணையின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைகிறீர்கள். பணியிடத்தில் பிரச்சனைகள் தீரும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று மனைவியுடன் நான் உறவில் இனிமையும், அரவணைப்பும் கிடைக்கும். மாணவர்கள் மேல் படிப்பு தொடர்பான விஷயத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பிரச்சனைகள் நீங்கும். வருமானத்தை உயர்த்துவது தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த முடியும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!