gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (16.6.24)

News18 Tamil

மேஷம்:
இன்று நீங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் மரியாதை உயரும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். உங்களின் வளர்ச்சிக்கான செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு மற்றும் வருமானம் அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தைப் பற்றிய சில கவலைகள் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நிறம்: பிங்க்




News18 Tamil

ரிஷபம்:
இன்று பெரியோர்களின் ஆலோசனையை பின்பற்றுவது உங்களுக்கு நன்மை தரும். இன்று ரிஸ்க்கான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இன்று நீங்கள் சட்டரீதியான தடைகளை சந்திக்க நேரிடலாம். எதிலும் அவசரப்பட வேண்டாம். மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். பேச்சில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: பர்கண்டி

News18 Tamil

மிதுனம்:
இன்றைய உங்கள் பயணம் சாதகமாக இருக்கும். பல நாட்களாக கிடைக்காமல் நிலுவையில் உள்ள பணம் இன்று கிடைக்க வாய்ப்பு உள்ளது, முயற்சி செய்யுங்கள். வணிகர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள். ஒரு சில புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: நீலம்




கடகம்:
உங்கள் மனதிற்குள் இருக்கும் அச்சத்தால் முக்கிய விஷயங்களில் உங்களின் முடிவெடுக்கும் திறன் குறையலாம். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். இன்று நீங்கள் பயணத்திற்கு திட்டமிட்டு இருந்தால் அது சுவாரஸ்யமாக இருக்கும். இன்று கடன் கிடைப்பது எளிதாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல செய்தி கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

News18 Tamil

சிம்மம்:
உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள். உங்களை உற்சாகமூட்டும் தகவல்கள் கிடைக்கும். உங்களின் சுயமரியாதைக்காக ரிஸ்க் எடுக்க தைரியம் உங்களுக்குள் இருக்கும். ஆடம்பரங்களுக்காக செலவு செய்யாதீர்கள். வணிகர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பயணத்தில் உங்களின் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்




News18 Tamil

கன்னி:
புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு இன்று அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தங்கள் வணிகத்தில் பெரும் லாபம் ஈட்ட முடியும். சக ஊழியர்கள் இன்று உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிரிகளின் செயல்பாடுகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

News18 Tamil

துலாம்:
இன்று காயம் அல்லது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே இன்று நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் ஆரோக்கியம் பலவீனமாகவே இருக்கும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. சட்ட விரோதமான எந்த ஒரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: கிரே




News18 Tamil

விருச்சிகம்:
உங்களின் ஆக்கப்பூர்வமான பணிகள் வெற்றி பெறும். பார்ட்டி மற்றும் பிக்னிக் செல்ல ஏற்பாடு செய்யலாம். உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக கழியும் என்றாலும் பேச்சில் கட்டுப்பாடு அவசியம். இன்று நீங்கள் கவன குறைவாக இருந்தால் எதிரிகளால் தோற்கடிக்கப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: வயலட்

News18 Tamil

தனுசு:
இன்று உங்களின் உற்சாகம் குறைய கூடும். ஆரோக்கியம் பலவீனமாகவே இருக்கும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் இருக்கும். பிறர் வேலையில் தலையிடாதீர்கள். உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். ஆபத்தான செயல்களைத் தவிர்க்கவும். உறுதியான வருமானம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்




News18 Tamil

மகரம்:
வணிகர்களுக்கு லாப வாய்ப்புகள் இருக்கும். புதிய முதலீடுகள் எதிர்பார்த்த பலனைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியும், உற்சாகமும், மனநிறைவும் உண்டாகும். இன்று நீங்கள் கெட்ட சகவாசத்தைத் தவிர்க்கவும். சட்ட ரீதியிலான தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நிறம்: லாவெண்டர்

News18 Tamil

கும்பம்:
இன்று உங்கள் நண்பர்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கலாம். பணம் சம்பாதிப்பது எளிதாக இருக்கும். ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் வணிகர்களால் தொழிலில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்




News18 Tamil

மீனம்:
ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் இருக்கும். இன்று தேவைக்கு அதிகமாக செலவுகள் ஏற்படும். உங்களின் எதிரிகள் இன்று சுறுசுறுப்பாக இருப்பார்கள், இதனால் உங்களுக்கு சில தொல்லைகள் ஏற்படலாம். புதிய முதலீடிற்கு சாதகமானசூழல் இருக்கும். வெற்றி பெற உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துங்கள். சொத்து தொடர்பான வேலைகளில் இன்று ஈடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!