lifestyles News

இந்திய விளையாட்டு துறையில் வழங்கப்படும் விருதுகள்..

துரோணாச்சாரியார் விருது
========================

– 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது
– இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெண்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 300,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.
– முதல் முறை விருது பெற்றவர் ஓ.எம். நம்பியார் (தட கள விளையாட்டுக்கள்) (1985)
– இந்த ஆண்டுக்கான (2015-2016) துரோணாச்சார்யா விருது பெறும் பயிற்சியாளர்கள் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.






அனூப் சிங் (மல்யுத்தம்)
சுவாந்திரா ராஜ்சிங் (குத்துச்சண்டை)
நிகார் அமீன் (நீச்சல்)
ஹர்பன்ஸ் சிங் (தடகளம்)
நாவல்சிங் (மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள்).

அர்ஜுனா விருது
===============

– 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது.
– இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 500,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.

2001 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது கீழ்கண்ட வகைகளில் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன:

– ஒலிம்பிக் விளையாட்டுகள் / ஆசிய விளையாட்டுகள் / பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் / உலக கோப்பை / உலக சாதனையாளர் துறைகள் மற்றும் துடுப்பாட்டம்
– இந்திய பரம்பரை விளையாட்டுகள்
– உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள்






முதல் முறை விருது வாங்கியவர்கள் (1961):

குர்பச்சன் சிங் ரந்தாவா (தடகள விளையாட்டுகள்)
நந்து நடேகர் (இறக்கைப் பந்தாட்டம்)
சர்ப்ஜித் சிங் (கூடைப்பந்தாட்டம்)
எல். பட்டி டிசௌசா (குத்துச்சண்டை)
மானுவல் ஆரோன் (சதுரங்கம்)
சலீம் துரானி (துடுப்பாட்டம்)
பீ.கே.பேனர்ஜி (கால்பந்து)
பிரிதிபால் சிங் (வளைத்தடி பந்தாட்டம்)
என்.லும்சுடென் (வளைத்தடி பந்தாட்டம்)
சியாம் லால் (சீருடற்பயிற்சிகள்)
ராமனாதன் கிருஷ்ணன் (டென்னிசு)
கர்னி சிங் (சுடுதல்)
பஜரங்கி பிரசாத் (நீச்சல்)
ஜே.சி. வோரா (மேசைப் பந்தாட்டம்)
ஏ. பழனிச்சாமி (கைப்பந்தாட்டம்)
ஏ.என். கோஷ் (பாரம் தூக்குதல்)
உதய் சான்ப் (மல்யுத்தம்)

2015 ஆண்டுக்கான விருது பட்டியல்:

பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (ஆக்கி)
தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்)
ஜிது ராய் (துப்பாக்கி சுடுதல்)
சந்தீப் குமார் (வில்வித்தை)
மன்தீப் ஜங்க்ரா (குத்துச்சண்டை)
பபிதா (மல்யுத்தம்)
பஜ்ரங் (மல்யுத்தம்)
ரோகித் சர்மா (கிரிக்கெட்)
ஸ்ரீகாந்த் (பேட்மிண்டன்)
ஸ்வார்ன் சிங் விர்க் (துடுப்பு படகு)
சதீஷ் குமார் சிவலிங்கம் (பளுதூக்குதல்)
சந்தோய் தேவி (வுசூ)
சரத் கெய்க்வாட் (பாரா-பாய்மரப்படகு)
எம்.ஆர்.பூவம்மா (தடகளம்)
மன்ஜீத் சிலார் (கபடி)
அபிலாஷா மாத்ரே (கபடி)
அனுப் குமார் யாமா (ரோலர் ஸ்கேட்டிங்).




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!