Samayalarai

ஆந்திரா ஸ்பெஷல் பெருகு பச்சடி செய்யலாம் வாங்க!

வாங்க மக்களே, இன்று நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால் பத்து நிமிடத்தில் தயிர் பயன்படுத்தி எளிதாக செய்யக்கூடிய ஆந்திரா ஸ்பெஷல் பெருகு பச்சடி எப்படி செய்வது என இப்பதிவில் பார்க்கலாம். இதை ஐந்து முதல் எட்டு நபர்கள் தாராளமாக சாப்பிடலாம்.




தேவையான பொருட்கள்: 

  • 1 லிட்டர் தயிர்

  • 5 ஸ்பூன் எண்ணெய்

  • 1 ஸ்பூன் கடுகு

  • ½ ஸ்பூன் வெந்தயம்

  • 2 ஸ்பூன் கடலைப்பருப்பு

  • 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு

  • ¼ ஸ்பூன் சீரகம்

  • 7 வர மிளகாய்

  • சிறிதளவு பொடியாக நறுக்கிய இஞ்சி

  • 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்

  • 1 பெரிய வெங்காயம்

  • கருவேப்பிலை சிறிதளவு

  • ½ ஸ்பூன் மிளகாய்த்தூள்

  • ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்

  • உப்பு தேவையான அளவு

  • 1 தக்காளி




செய்முறை விளக்கம்: 

  • முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு, வெந்தயம் போட்டு நன்றாக வறுக்கவும்.

  • அடுத்ததாக இஞ்சி, சீரகம், வரமிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் வரமிளகாயைப் போடவும். இத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்கு வதக்கவும்.

  • பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து அனைத்தும் நன்றாக வேகும் வரை வதக்கவும். இறுதியாக அந்தக் கலவையில் கருவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து, தக்காளி அரைவேக்காடு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

  • இப்போது இந்த கலவையை கரைத்து வைத்துள்ள ஒரு லிட்டர் தயிரில் அப்படியே கொட்டி கலந்துவிட வேண்டும்.

  • இறுதியாக கொத்தமல்லியை மேலே தூவி உப்பு சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து சாதத்தில் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள், சுவை வேற லெவலில் இருக்கும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த ஆந்திரா ஸ்பெஷல் பெருகு பச்சடியை ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!