Samayalarai

அசத்தும் சுவையில் மக்ரூன் ஸ்வீட்: செய்யலாமா?

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்து கடற்கரையோரப் பகுதி மக்கள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளுள் ஒன்று மக்ரூன். இந்த முந்திரி ஸ்வீட்டுக்கு பிரபலமான ஊர், தூத்துக்குடி. வெள்ளை நிறத்திலிருக்கும் இந்த இனிப்பை வாயில் போட்டாலே கரைந்து விடும் என்பதால் இதை குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடுவர்.

மக்ரூனை நாம் வீட்டில் செய்ய முடியும். ரொம்ப ஈசியான ரெசிபி இதோ.




மெக்ரூன்ஸ் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Macaroons (Indian Style) - HTMRecipe - How To Make Recipe

 தேவையான பொருட்கள்

அரை கப் – சர்க்கரை

1 கப் முந்திரி

3 முட்டை

உப்பு கால் டீ ஸ்பூன்

1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்

  •  செய்முறை :

  • அரை கப் சர்க்கரையை அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து 1 கப் முந்திரியை நாம் அரைத்து எடுக்க வேண்டும். முட்டையின் வெள்ளைக் கருவை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.

  • ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். பீட்டர் வைத்து அடித்துகொள்ளுங்கள். அதில் பவுடர் செய்த சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிட்டரில் பீட் செய்ய வேண்டும். கால் டீஸ்பூன் உப்பு , வெண்ணிலா எசன்ஸ் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.

  • தற்போது ஒரு ஸ்பூன் வைத்து மெதுவாக கிளர வேண்டும். வீட்டில் உள்ள மைக்ரோவேவ் ஓவனை 10 நிமிடங்கள் சுடு செய்ய வேண்டும்.

  • மைக்ரூன் பேஸ்டை சிறிய பிளாஸ்டிக் கவரில் வைத்து அடியில் ஓட்டை போட்டு அதை மக்ரூன் போல் புழிந்துகொள்ள வேண்டும். இதை நாம் ஓவன் வைக்கும் டிரேவில் செய்ய வேண்டும். 120 டிகிரி-க்கு குறைவாக வைத்து 1 மணி நேரம்  30 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும்.




வீட்டுக் குறிப்பு

சிப்ஸ்க்கு உருளைக்கிழங்கு சீவி மஞ்சள் பொடியும் உப்பம் கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து விட வேண்டும் பின்பு துணியில் துடைத்து விட்டு வறுத்தால் நல்ல நிறமும் மொறுமொறுப்பும் கிடைக்கும்.

பீன்ஸ் பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் இயல்பான நிறம் கிடைக்கும்

காளானை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும் நனைந்த துணி அல்லது சுத்தமான பிரஷ் மூலம் சுத்தப்படுத்தலாம் குளிர்ந்த நீரில் கழுவி காய்ந்த டவலால் துடைத்தெடுத்த பிறகு சமையல் செய்ய வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!