Beauty Tips

வெள்ளை முடிக்கு டாட்டா சொல்லலாம்

வயதானவர்களுக்கு நரைமுடி பிரச்சனை இருந்தால் ஒன்று கவலைப்பட தேவை இல்லை.. ஆனால் இப்போது எல்லாம் டீனேஜ் வயதில் இருப்பவர்களுக்கு கூட நரைமுடி பிரச்சனை வருகிறது. ஆக இந்த நரைமுடிக்கு Solution தேடுகின்றன. அந்த Solution இயற்கையான முறையாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அது செயற்கையானதாக இருந்தால் பின் அதிக பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். என்றுமே இயற்கையான முறைகளை பின்பற்றுவது மட்டுமே சிறந்த முறையாகும். உங்கள் நரை முடிக்கு இயற்கையான வழிமுறையை தேர்வு செய்ய விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இங்கு நரைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் ஒரு ஹேர் டை தயார் செய்யும் முறையை தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன ஹேர் டை என்று இப்பொழுது பார்த்துவிடலாம்.




தேவையான பொருட்கள்:

  • ஓமவல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு

  • விட்டமின் ஈ மாத்திரை – இரண்டு

ஓமவல்லி ஹேர் டை தயார் செய்யும் முறை:

  • முதலில் ஒரு கையளவு ஓமவல்லி இலையை பறித்துக்கொள்ளுங்கள்.

  • பின் அதனை சுத்தமாக அலசி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

  • பிறகு மிக்சி ஜாரில் அவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

  • இலை நன்கு அரைபட்டதும் அவற்றை வடிகட்டி சாறுபிழிந்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

  • பின் இந்த சாறுடன் இரண்டு விட்டமின் ஈ மாத்திரையில் இருக்கும் ஆயிலை மட்டும் பிழிந்து கலந்துகொள்ளவும் அவ்வளவு தான் ஹேர் டை தயார்.




பயன்படுத்தும் முறை:

  • தலை முடி எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். ஆக முதல் நாளே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்துவிடுங்கள்.

  • பிறகு மறுநாள் இந்த ஜூஸை தயார் செய்து தலைக்கு அப்ளை செய்யுங்கள், அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். பிறகு தலைக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் தலை அலசவும்.

  • இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் போதும் நரைமுடி கருமையாகும்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!