Cinema Entertainment

வாடகைத் தாய் கதையை 40 வருடங்களுக்கு முன்பே சொன்ன தமிழ் சினிமா…நடிகை லட்சுமிக்கு

பூர்வீக சினிமாக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை லட்சுமி தென்னிந்திய சினிமாவில் நன்கு அறிமுகமான நடிகை. ஹீரோயின், குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதைக் கரைய வைப்பவர். இவரது நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அவன் அவள் அது.

 

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவக்குமார்,ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருப்பர். இன்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை சமூகம் வேறுவிதமாகப் பார்க்கும் சூழலில் அதனை 40 ஆண்டுகளுக்கு முன்னராகவே திரையில் நடித்துக்காட்டி அதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது இத்திரைப்படம். இந்தத் திரைப்படம் எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலாகிறது என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் வாடகைத் தாயாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை லட்சுமி மழலைப் பட்டாளம் என்ற படத்தினை இயக்கிக் கொண்டிருந்தாராம். அப்போது முக்தா சீனிவாசன் இவரை செல்லமாகக் கோபித்து நீங்கள் எல்லாம் இயக்குநராகிவிட்டால் நாங்கள் எதற்கு உள்ளோம் என்று லட்சுமியிடம் செல்லச்சண்டைபோட்டு உனக்காகவே கதை எழுதி வைத்திருக்கிறேன் வந்து நடித்துக்கொடு என்று உரிமையோடு கேட்க லட்சுமி நடித்த படம் தான் அவன் அவள் அது.




இதே போன்று ஜெயகாந்தனின் சாகித்ய அகாதமி விருது பெற்ற புதினமான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தினை பீம்சிங் இயக்க அதில் நாயகியாகவும் நடித்தார் லட்சுமி. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் ஏ.வி.எம். தயாரிப்பில் விசு இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட்டான சம்சாரம் அது மின்சாரம் படத்திலும் லட்சுமியின் நடிப்பு ஒரு நடுத்தர வர்க்கத்து மருமகளின் உணர்வுகளை எளிதாக தனது நடிப்பால் பிரதிபலிப்பதாக இருக்கும்.

இவ்வாறு கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமியின் ஆரம்ப காலப் படங்கள் அனைத்துமே அவருக்கு பெயர் சொல்லும் விதமாக நல்ல நல்ல கதபாத்திரங்களை உள்ளடக்கியதாகவே இருக்கும். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் ஊதித் தள்ளும் லட்சுமிக்கு சம்சாரம் அது மின்சாரம் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களில் மட்டும் மிகுந்த பயிற்சி எடுத்து நடித்தாராம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!