lifestyles

தென் துருவத்தை அடைந்து சாதனைப் படைத்த முதல் இந்திய வம்சாவளிப் பெண்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத் சண்டி தனி ஆளாக தென் துருவத்தைச் சென்றடைந்துள்ள முதல் பெண் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத் சண்டி இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

ப்ரீத் சண்டி கடந்த நவம்பர் மாதம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். 40 நாட்களில் அண்டார்டிகா முழுவதும் 1,126 கி.மீட்டர் வரை பனிச்சறுக்கு செய்தபடி கடந்து சென்று இந்த சாதனையைப் படைத்திருக்கிறார். இந்தப் பயணத்தைப் பற்றி ப்ரீத் சண்டி விவரிக்கும்போது, “பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம் அண்டார்டிகா. யாரும் அங்கு நிரந்தரமாக வசிக்க முடியாது. இந்தப் பயணத்தைத் திட்டமிட்ட புதிதில் நான் அங்குள்ள சூழல் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. பிறகு பிரெஞ்சு ஆல்ப் மலையிலும் ஐஸ்லாந்தில் உள்ள மலைகளிலும் கடும் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.




பயணத்திற்குத் தேவையான உணவு, உடை, மருந்துப் பொருட்கள் என கிட்டத்தட்ட 90 கிலோ எடையை சுமந்து சென்றேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். முயற்சி செய்யும் அனைவராலும் சாதனை படைக்கமுடியும் என்கிற ஊக்கத்தை அளிக்கிறார்.

“இந்தப் பயணத்தின் முடிவில் என்னுடைய நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒருவர் தன்னுடைய செயல்களில் முழு நம்பிக்கை வைத்து முயற்சிகளை மேற்கொண்டால் எப்படிப்பட்ட எல்லைகளையும் கடந்து மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கமுடியும். இதற்கான உத்வேகத்தை மற்றவர்களுக்கும் வழங்க விரும்புகிறேன்,” என்று ப்ரீத் சண்டி நம்பிக்கை வரிகளை உதிர்க்கிறார். பிரிட்டன் ராணுவத்தின் தலைமை அதிகாரி, ப்ரீத் சண்டி படைத்துள்ள சாதனைக்காக அவரைப் பாராட்டியுள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!