Serial Stories

உடலென நான் உயிரென நீ-25

25

” இதோ இங்கே பாருங்கள் சார்.  உங்கள் தங்கை வளர்மதி மேடத்திற்கும் மதுரவல்லிக்குமான வித்தியாசங்களை கவனியுங்கள். வளர்மதிக்கு கொஞ்சம் உப்பலான கன்னங்கள். இரு கன்னங்களிலும் அழகான குழி. இதற்காக நாங்கள் ” டிம்பிள் ப்ளாஸ்டி ” ஆபரேசன் மதுரவல்லிக்கு செய்தோம். கன்னத்தின் உள் தோலில் சிறு ஊசியை செலுத்தி தோலை உள்ளே  இழுத்து தைத்து விடுவதுதான் இந்த முறை .இதனால் கன்னத்தில் இயற்கை போல் குழி உருவாகிவிடும் . “




” வளர்மதிக்கு சற்று தடிமனான உதடுகள். மதுரவல்லிக்கு மெலிதான உதடுகள். இதனை மாற்ற நாங்கள் மதுரவல்லிக்கு ” லிப் ஆக்மென்டேசன் ” ஆபரேசன் செய்தோம் .  உதட்டின் மேல் பகுதி திசுக்களுக்குள் அவை குறிப்பிட்ட வளர்ச்சி அடைவதற்கான மருந்தை ஊசி மூலம் செலுத்துவதற்கே இந்த ஆபரேசன். இதனை மதுரவல்லிக்கு செய்ததன் மூலம் அவளது உதடுகள் தடிமனாக மாறின .”

”  வளர்மதிக்கு குறுகலான பிறை நெற்றி .மதுரவல்லிக்கு சற்று பரந்த நெற்றி .இதனை மாற்ற மதுரவல்லியின் பாதி நெற்றியை மறைத்து செயற்கையாக முடியை பொருத்தி்வளர வைத்தோம் .”

” இதோ இப்போது பாருங்கள் .வளர்மதியும் மதுரவல்லியும் ஒரே தோற்றத்திற்கு வந்துவிட்டனர் …” வளர்மதியின் புகைப்படத்தையும்,  சிகிச்சைக்கு பின்னான மதுரவல்லியின் புகைப்படத்தையும் அருகருகே வைத்துக் காட்டினான்.நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் இருவரும் பொருந்தி இருந்தனர் .

” இப்படி இயற்கையை மாற்றுவதால் எந்த பிரச்சனையும் வராதா டாக்டர் ? ”  கேட்ட போதே கனகலிங்கத்தின் பார்வை கவலையுடன் மதுரவல்லியை தொட்டு மீண்டது .

”  முதலில் சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.இது போன்ற ட்ரீன்மென்டுகளை எங்களை போன்ற எக்ஸ்பெர்ட் மருத்துவர்கள் மூலம் செய்து கொள்ள வேண்டும் .ஒவ்வொருவரின் உடலை பொறுத்து இச் சிகிச்சைகளில் சைடு எஃபெக்ட்ஸ் வரத்தான் செய்யும்.  உதடு ஆபரேசனில் சாதாரணமாக காயம் பத்து நாட்களில் சரியாகிவிடும். மதுரவல்லிக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆனது.  கன்னக்குழி சிகிச்சையில் முதலில் கன்னங்கள் எப்போதும் குழி விழுந்தாற் போன்றே தெரியும் .நாள் போக போகவே சிரித்தால் குழி என மாறும். மதுராவிற்கு சிரிக்கும் போது கன்னத்தில்குழி விழ இரண்டு மாதங்களாகி விட்டது. அத்தோடு ஹேர் இன்ப்ளன்டேசனில் அவள் நெற்றி கன்னங்களில் லேசான கருமை படந்து  விட்டது .இது போன்ற இடையூறுகளால் அவள் இப்போது வரை ட்ரீட்மென்டிலேயே இருக்க வேண்டியதானது. அந்தக் காலகட்டத்தில் அவளை பார்த்தாலும் உங்களுக்கு அடையாளம் தெரிந்திருக்காது. இப்போது சில நாட்களாக அவள் உங்கள் தங்கையின் ஜாடையில் மாறிக் கொண்டு வர நீங்கள் அடையாளம் தெரிந்து கொண்டீர்கள் “

கனகலிங்கம் நம்ப முடியா ஆச்சரியத்துடன் திரும்பி  அருகே அமர்ந்திருந்த மதுரவல்லியை பார்த்தார் .இரு கைகளையும் நீட்டி மதுரவல்லியின் முகத்தை பற்றி தூக்கி பார்த்தார் .” குட்டி ” அவர் உதடுகள் முணுமுணுத்தன .

” அம்மாவை அப்படித்தான் கூப்பிடுவீங்களா மாமா ? ”  மதுரவல்லியின் கேள்வியில் சுய உணர்வடைந்தவர் லேசாக தலையை உதறி தன் பிரமையை விலக்கிக் கொண்டார் . மதுரவல்லியின் முகத்திலிருந்து கையை விலக்கிக் கொண்டு எழுந்து நின்றார் .

” இவளது முன்கதை என்னவாகவும்  இருந்து விட்டு போகட்டும் .  எங்கள் குடும்ப கௌரவத்தை அழித்தவளின் மகளுக்கு எங்கள் வீட்டில் இடமில்லை .உங்கள் மனைவியை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறி விடுங்கள்.” கனகலிங்கம் வாசலுக்கு நடக்க …

” ஒரு நிமிடம் சார் …என் அம்மாவும் ,  இவளுடைய அம்மாவும் மருத்துவமனை சிகிச்சைகளின் போது தோழிகளாகி விட்டனர். வளர்மதி மேடத்தின் கஷ்டங்களை குறைப்பதாக , அவர் மகளை அவரது பிறந்த வீட்டினரிடம் ஒப்படைத்து விடுவதாக என் அம்மா உறுதி கொடுத்து விட்டார். அம்மாவின் விருப்பத்திற்காக இவளின் பொறுப்பை தலையில் ஏற்றிக் கொண்டேனே தவிர விரும்பி அல்ல .எனக்கென்று தனி வாழ்க்கை இருக்கிறது .உங்கள் பாரத்தை நீங்களே வாங்கிக் கொண்டு என்னை விடுவித்து விடுங்கள் …”




கணநாதனின் ஒட்டுதலற்ற பேச்சை வெறித்து பார்த்தவள் கனகலிங்கம் பக்கம் பார்க்க ”  எந்த பாரத்தையும் நான் ஏற்றுக் கொள்ள தயாரில்லை ” அறிவிப்போடு வெளியே போய்விட்டார் கனகலிங்கம் .

கணநாதன் பக்கம் திரும்ப அவன் உள்ளே போயிருந்தான்.  இரு ஆண்களும் தன்னை பந்தாக எத்தி விளையாடுவதாக உணர்ந்தாள் மதுரவல்லி. அழ  ஆரம்பித்த கண்களை அதட்டி அடக்கியபடி தோப்பிற்குள் மெல்ல இறங்கி நடந்தபடி தான் அடுத்து என்ன செய்யவென்று யோசித்தபடி இருந்த போது ….

” என் பெயர் எந்த இடத்திலும் வெளி வரக் கூடாதென …”  தாரா ஒரு மரத்தின் பின் நின்று பேசிக் கொண்டிருந்ததை கேட்டாள்.

யாருடன் பேசுகிறாள்…கொஞ்சம பக்கம் போய் கவனிக்க …” நைட் வந்து மூக்கை பொத்தி தூக்கிட்டு போங்க. பகல் நேரத்தில் டாக்டரய்யாவோட மனைவியை சம்மதமில்லாமல் தூக்கிப் போக இந்த ஊர்  ஜனங்க விட மாட்டாங்க “

” ஆமாம்.  அதுதான் சரி .நான் வீட்டு  கதவை திறந்து வைத்து விட்டு போனில் சொல்கிறேன் .பிறகு வாங்க சந்திரலால் சார் ” என அவள் பேச்சை முடிக்க மதுரவல்லி  அதிர்ந்தாள் .

அடிப்பாவி இவள் சந்திரலாலுக்கு இந்த அட்ரஸ் கொடுத்து விட்டாளா ?  நாங்கள் பேசியதை வீட்டிற்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்து விட்டு இப்படி செய்கிறாளா …துரோகி..தாராவை பற்றி கணநாதனிடம் சொல்ல நினைத்த போதே , அவன் நம்புவானா என்ற சந்தேகமும் அவளுக்கு வந்து விட்டது. அவன் தான் இப்போது இந்த தாராவைத்தானே நம்புகிறான் .

இப்படி ஆளாளுக்கு தன்னை உதைத்து தள்ளுபவரகளுக்கிடையே தன்னை தேடி அலைந்து ஆவலோடு பார்க்க வருபவனுடனேயே சென்று விட்டால்.தான் என்ன …? மதுரவல்லியன் மனம் இப்படி யோசிக்க ஆரம்பித்தது .




What’s your Reaction?
+1
28
+1
17
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
29 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!