gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (25.05.24)

குரோதி வருடம் வைகாசி 12, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள அஸ்வினி, பரணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று உங்கள் ராசிக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம தினமாக இருப்பதால் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதும்,, வேலையை கவனம் செலுத்தி முடிப்பதும் நல்லது. இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். காதல் விஷயத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இன்று கடினமாகவும், நம்பிக்கையுடனும் உழைப்பது அவசியம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஏற்படும். அதன் மூலம் வேலையில் நல்ல வெற்றியை பெற்றிடலாம். இன்று புதிய பொருட்களை வாங்கவும், முதலீடுகளிலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல துணை அமையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.




மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மோசமான நாளாக இருக்கும். அன்றாட வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். இன்று உங்களின் நிதி நிலை பற்றாக்குறை ஏற்படக்கூடியதாக இருக்கும். உறவினர்களிடமிருந்து அன்பு பரிசு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள். உங்களின் வரவு செலவுகளை திட்டமிட்டு செய்யவும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக இருக்கும். வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். இன்று கடினமாக உழைக்க மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறலாம். குடும்பத்தினருடன், உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நட்பில் அழகான விஷயங்கள் நடக்கும். இன்று எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க கூடிய தைரியமும், உடல் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெற வாய்ப்புள்ளது. இன்று நட்பாக பழகும் ஒருவரை காதலிக்க தொடங்குவீர்கள். உங்களின் வரவு சிறப்பாக இருக்கும், வங்கி சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களின் வேலையில் முழு அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தேவைப்படும். செல்வம் மற்றும் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.




கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் நல்ல வெற்றி அடைவீர்கள். புதிய திட்டத்திற்கான பொறுப்புகள் ஏற்று செயல்படுவீர்கள். எந்த ஒரு திட்டத்திலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். பங்கு சந்தை முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் பெறலாம். காதல் பறவைகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சற்று கடினமான சூழல் இருக்கும். உங்கள் செயலில் கவனம் தேவை. உங்கள் உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உள்ள அரசியலில் இருந்து விலகி இருக்கவும். இன்று பொழுதுபோக்கிற்காக அதிகமாக செலவிட வாய்ப்புள்ளது. திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல துணை அமையும். இன்று புதிய வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும்.




விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். இன்று அதிகமாக நம்ப வேண்டாம். இன்று உங்கள் குடும்ப பொறுப்புகளை சிறப்பாக கையாள்வீர்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று மன உறுதியுடன் செயல்படுவது அவசியம். மாணவர்கள் படிப்பில் சிறப்பான வெற்றி கிடைக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.




தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களின் கனவுகள் நினைவாகும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பல பொன்னான வாய்ப்புகள் தேடி வரக்கூடிய நாள். சரியான வாய்ப்புகளையும், நேரத்தையும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. போட்டி தேர்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கடின உழைப்பிற்கான பலனை பெற்றிடுவீர்கள். வணிக வர்க்கத்தினருக்கு மிகவும் சாதகமான நாள். அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு உள்ளது.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல அனுபவங்களை பெறுவீர்கள். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறி குருகுலம் அடைவீர்கள். இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியில் இருக்கும். ஆரோக்கியம் சாதகமான விளைவை ஏற்படுத்தும். உங்கள் வேலையில் நல்ல வெற்றி அடையலாம். மாணவர்கள் ஒரு உயர் கல்விக்கான முயற்சியில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்க கூடிய நாள்.




கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக இருக்கும். வேலைகளை முடிப்பதில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள். இன்று அன்பானவர்களிடமிருந்து பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் துணையுடன் காதல் அதிகரிக்கும். அரசு வேலைக்கு தயாராகக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அதிக ஆர்வத்துடன் எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். இன்று உங்களின் வருமானத்தை அறிந்து செலவு செய்வது நல்லது.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகமான, வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் பணம் மற்றும் ஆரோக்கியத்திற்கு சாதகமான நாள். குடும்பம் மற்றும் சமூக பணிகளுக்காக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் தொழிலில் நல்ல வெற்றி பெற வாய்ப்புள்ளது. வேலையில் சில அழுத்தமான சூழ்நிலை இருக்கும். காதல் விஷயத்தில் புரிதல் சிறப்பாக இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!