Cinema Entertainment

‘நேற்று இந்த நேரம்’ திரைப்பட விமர்சனம்

நாயகன் ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் அவர்களது நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு காதலர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையிலும் சில மோதல்கள் ஏற்படுகிறது. அந்த மோதலுக்குப் பிறகு நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார். அதுபற்றி போலீசில் புகார் அளிக்க, போலீஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது, புகார் கொடுத்த நண்பரும் திடீரென்று மாயமாகி விடுகிறார்.




மாயமான இரண்டு பேர் பற்றியும் போலீஸ் விசாரிக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா?, அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘நேற்று இந்த நேரம்’.

வில்லத்தனம் கலந்த நாயகன் வேடத்தில் நடித்திருக்கும் ஷாரிக் ஹாசன், நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா மற்றும் நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்,  அரவிந்த் மற்றும்

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வா மற்றும் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலா என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒரே சம்பவதை பல கோணங்களில் விவரித்து இயக்குநர் சாய் ரோஷன்.கே.ஆர்,  திரைக்கதையை வித்தியாசமாக கையாண்டிருந்தாலும், ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது ரசிகர்களுக்கு தூக்கத்தை வர வைத்துவிடுகிறது.




காணாமல் போன ஷாரிக் ஹாசனின் நிலை என்ன? என்ற கேள்வியும், நண்பர்களில் யார் குற்றவாளி? என்ற கேள்வியும் படத்தை சற்று விறுவிறுப்பாக நகர்த்தினாலும், இடையில் வரும் சைக்கோ கொலையாளி உள்ளிட்டவை படத்தின் நீளத்தை அதிகரித்து ரசிகர்களின் பொருமையை சோதிக்கிறது.

விஷாலின் ஒளிப்பதிவும், கெவினின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருந்தாலும், படத்தொகுப்பாளர் கோவிந்த், கையில் கத்திரி எடுக்காமல் இயக்குநர் எடுத்த காட்சிகளை அப்படியே தொகுத்திருப்பது படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், ‘நேற்று இந்த நேரம்’ நெடுந்தூர பயணமாக இருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!