lifestyles Sprituality

வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி சேராமல் இருக்க

வீடு கோவில் போன்றவற்றை கட்டுவதற்கு நாம் அந்த காலத்தில் இருந்தே சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அதுவே தற்காலத்தில் வாஸ்து முறைகள் என்று பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.  வாஸ்து என்பது வேறு ஒன்றும் இல்லை அந்தந்த இடங்களில் அதற்கான பொருள்களை சரியான முறையில் அமைப்பதே. இதன் மூலம் வீட்டில் தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜிகள் தங்காமல் வீடு எப்போதும் நல்ல நேர்மறை ஆற்றலுடன் இருக்கும். இந்த வகையில் எல்லா வீடுகளும் அமைந்து விடும் என்று சொல்ல முடியாது.




8 Ways To Remove Negative Energy From Your Home | Home & Garden News, Times Now

சில நேரங்களில் நாம் பார்த்து பார்த்து செய்தாலும் எங்கோ சில இடங்களில் தவறு நேர்ந்து விடும் சில நேரங்களில் வீடு கட்டிய பிறகு நாம் செய்யும் சிறு தவறுகளாலும் இந்த நெகட்டிவ் எனர்ஜி நம் வீட்டில் குடிக்கொண்டு விடும். அவற்றையெல்லாம் அகற்றக் கூடிய எளிய ஒரு வாஸ்து குறிப்பு பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி போக நம் வீட்டில் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறு. இறந்த முன்னோர்களின் புகைப்படங்களை பூஜை அறையிலோ அல்லது வீட்டில் உள்ளே நுழையும் இடத்தில் வைப்பது தான். அப்படி நீங்கள் வைத்திருந்தால் அதை எடுத்து விடுங்கள். இறந்தவரின் புகைப்படங்களை எப்போதும் தெற்கு பார்த்தவாறு அதுவும் தனியாகத் தான் மாட்ட வேண்டும்.




அடுத்து பூஜை அறையில் எப்போதும் காய்ந்த பூக்களை வைத்திருக்க வேண்டாம். இதன் மூலம் நெகட்டிவ் எனர்ஜி உடனடியாக தோன்று விடும். ஆகையால் பூக்களை வைத்து பூஜை செய்த பிறகு வாடிய விட உடனே பூஜை அறையில் இருந்து அகற்றி விடுங்கள்.

அதே போல் பூஜை அறையில் சங்கு வைத்து வழிபடுவது நல்லது. அதுவும் பூஜை செய்த சங்கு வைத்து வழிபடும் மிகவும் நல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சங்குகளை வைத்து வணங்க வேண்டாம்.சனி பகவானின் படமோ அல்லது சிலையோ வீட்டில் வைத்து வணங்கக் கூடாது. இது நெகட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க கூடியது.

இத்துடன் உடைந்த சிலைகள், கிழிந்த பாழடைந்த கடவுளின் திருவுவ படங்களை வைத்து வணங்க கூடாது. பூஜை அறையை எப்போதும் சுத்தமாகவும் நறுமணத்துடன் வைத்திருக்க வேண்டும். இது வீட்டிற்கு நல்ல ஒரு நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.

அதே போல் வீட்டில் உடைந்த பர்னிச்சர்கள் வாசல் கதவுகள் போன்றவற்றை உடனே அப்புறப்படுத்த வேண்டும் அல்லது சரி செய்து விட வேண்டும். பெரும்பாலும் வரவேற்பு அறையில் அலங்காரத்திற்கென பிளாஸ்டிக் குவிக்கிறார்கள்.இதன் மூலம் வீட்டில் சனியின் ஆதிக்கம் தான் ஏற்படும்.

பர்னிச்சர் கதவு போன்றவற்றையெல்லாம் மரத்திலால் ஆனதாக இருந்தால் நல்லது . வரவேற்பறையில் நாம் மாட்டி வைக்கும் புகைப்படங்களும் வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி அதிகப்படுத்தும் சோகமான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் எந்த விதமான படங்களையும் மாட்டக் கூடாது.




இயற்கை காட்சிகள், ஆடும் மயில், ஓடும் குதிரை இப்படியான நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய படங்களாக வரவேற்பறையில் மாட்டி விடுவது நல்லது. அதே போல் வரவேற்பு அறையில் மணி பிளான்ட், ஸ்பைடர் பிளான்ட் ,அள்ளிச் செடி போன்றவற்றை வளர்ப்பது காற்றை சுத்திகரித்து தருவதுடன் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

இந்த செடிகள் வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் நல்ல நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் கற்றாழை போன்றவற்றை வளர்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் நாம் செய்யும் சில தவறுகளால் நிகழ்த்தி எனர்ஜி நம்மை சூழ்ந்து ஆரோக்கியக்கேடு பொருளாதார செயற்குழுவில் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். வீடு கோவில் போன்றது. அதை பராமரிக்கும் விதத்தில் பராமரித்ததால் கோவிலாக மாறும் இல்லை என்றால் அதுவே நமக்கு தீங்காக மாறி விடும்.

இந்த சின்ன சின்ன விஷயங்களை சரி செய்து விட்டாலே நமக்கு ஏற்படக்கூடிய பெரிய நஷ்டங்களை தவிர்த்து விடலாம் இதற்கென அதிக பணம் செலவழித்து வாஸ்து பார்த்துகொண்டிருக்க  தேவையில்லை என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!