gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/திரௌபதி முன்ஜென்மம் கதை

திரௌபதி முன்ஜென்மத்தில் நாளாயனி குஷ்டரோகியும் , கிழவரும், கடும்கோபமுள்ளவரும் ,பொறாமையும் உள்ளவரான மௌத்கல்யர் அவள் கணவர் ஆவார் . அவருக்கு பணிவிடைகள் செய்து வந்தாள் நாளாயனி .அவளது பணிவிடைகளில் மகிழ்ந்த மௌத்கல்யன் அவள் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு 5 சிறந்த அழகான புருஷர்கள் ஆகி அவளை திருப்தி செய்தார்.

Draupadi Mahabharat Story,மகாபாரதத்தில் வரும் திரௌபதியைப் பற்றி அறிந்திராத உண்மைகள் - 14 கணவர்களை கேட்ட திரௌபதி - unknown facts about draupadi from mahabharat : sexual life of ...

பதிவிரதை தவத்துடன் வாழ்ந்த நாளாயனி அருந்ததி ,சீதை போல வாழ்ந்தாள். மௌத்கல்யர் பெரும் தவசீலர் அவர் சிறிது நாட்களில் இல்லறத்தை விடுத்து தவவாழ்வில் நாட்டம் கொண்டார். ஆனால் நாளாயனி கணவன் மீது எப்போதும் நாட்டம் கொண்டால் இல்லறத்தை விரும்பினால் இதனால் கோபம் கொண்ட மௌத்கல்யர் என் தவத்தை கெடுப்பதால் உன் இச்சை அடங்காததால் பூமியில் பிறந்து 5 கணவர்களுக்கு மனைவி ஆவாய் என்று சபித்தார்.




🌷🌷ஐந்து கணவர்கள் ஏன் :–

🌺நாளாயனி தன் கணவன் சாபத்தால் மனமுடைந்து சிவனை நோக்கி கடும்தவமிருந்தால் பசுபதிநாதர் அவள் முன் தோன்றி வேண்டும் வரத்தை கேட்டார். நளாயனி கணவன் வேண்டும் என்று 5 முறை கூறினால் சிவனும் பூமியில் சிறந்த ஐவருக்கு மனைவியாக இருப்பாய் என்றார் .நாளாயனி நான் ஒரு கணவனை தான் வரமாக கேட்டேன் என்றாள் 5 முறை கேட்டதால் 5 கணவர்களை அடைவாய் எல்லாம் விதிப்படியே நிகழ்கிறது . காமசுகமும் ,தவப்பயனும் என்றும் ஒன்றுடன் ஒன்று சேராது ஆனால் நீ புனித ஸ்ரீ ஆதலால் எப்போதும் கன்னியாக இளமையுடன் இருப்பாய் என்று வரமளித்தார்

சிவபெருமான் நாளாயனியிடம் தேவர்கள் தலைவன் இந்திரனை இப்போது என்முன் அழைத்து வா என்று கூறினார். அப்போது தேவர்கள் தலைவன் இந்திரனும் மற்ற தேவர்களும் நைமிசாரண்யத்தில் யாகத்தில் இருந்தனர் . அப்போது அக்கினிக்கு இணையான அந்த பெண் கங்கையில் இறங்கி அழுதுகொண்டிருந்தாள் . அவள் கண்ணீர் துளிகள் தங்கத்தாமரை மலர்களாக கங்கையில் மிதந்தன.

இந்திரன் அவள் அருகில் சென்று சிறந்த பெண்ணே நீ எதற்கு அழுகிறாய் என்று கேட்க நான் யாரென்று தெரியவேண்டுமானால் என்னுடன் வாருங்கள் என்றால் இந்திரனும் அவளுடன் சென்றான் . வழியில் ஒரு சிறுவன் சிறுமியுடன் சொக்கட்டான் அடிக்கொண்டிருந்தான் . இந்திரன் மற்றும் அந்த தெய்வீக ஸ்ரீ வருவதை பொருட்படுத்தாமல் ஆடிக்கொண்டு இருந்தான்.




இந்திரன் கோபம் அடைந்து நானே இந்த உலகங்களின் ஈஸ்வரன் என்று கூற அந்த சிறுவன் சிரித்து இந்திரனை பார்த்ததும் இந்திரன் பூமியில் விழுந்தான் மீண்டும் நினைவு பெற்ற இந்திரன் சிறுவன் சிறுமியாக இருந்தது சிவன் பார்வதி என்றறிந்துகொண்டான் . ஏற்கனவே இதே போன்று ஆணவமாய் பேசி குகையில் இருக்கும் பழைய 4 இந்திரர்களை கண்டான்.

அனைத்து இந்திரர்களும் சிவனை வணங்கினர் . ஏற்கனவே செய்த பாவம் மற்றும் இப்போது உள்ள பாவத்திற்கு பூமியில் பிறந்து சொர்க்கம் செல்வதே உரியது என்று சிவன் கூறினார் .பூமி பாரத்தை போக்க சிறந்த வீரர்கள் மற்றும் தேஜஸ்நிறைத்தவர்களாக பூமியில் பிறந்து ராஜலக்ஷ்மியாகிய இந்த தெய்வீக ஸ்ரீ யை மணம்புரிவீர்கள் என்று கூறினார் .அதுபோலவே பழைய இந்திரர்களலான விஸ்வபுக், பூதத்தாமன்,சிபி,சாந்தி,தேஜஸ்வி ஆகியோர் யமன் , வாயு , அஸ்வினிதேவர்கள் மூலம் குந்திக்கு பாண்டவர்காளாக பிறந்தனர் . புதிய இந்திரன் மட்டும் தன்னில் ஒருபாதியை அர்ஜுனனாக கொடுத்தான் .ராஜலக்ஷிமியாகிய தெய்வீக ஸ்ரீ திரௌபதியாக அவதரித்தாள்.மேலும் துருபதன் யாகத்தின் போதும் அவள் மனைவி தன் மகளுக்கு 5 கணவர்கள் வேண்டும் என்றுகேட்டாள்.

🌷🌷லட்சுமி போன்ற தெய்வீக ஸ்ரீ :–

🌺போர் முடிந்து தர்மர் சொர்க்கம் செல்லும் போது கர்ணனை ஆதித்யர்கள் நடுவிலும் ,பீமனை வாயுவினருகிலும்,நகுல சகாதேவனை அஸ்வினிகுமாரகள் அருகிலும் பார்த்த தர்மர் திரௌபதியை பார்க்கும் போது இந்திரர் தர்மனிடம் இவள் கர்ப்பத்தில் பிறக்காதவளும் புண்ணியசம்பந்தமுள்ள
லட்சுமி ஆவாள்.சிவனால் படைக்கப்பட்ட தெய்வீக ஸ்ரீ என்று கூறுகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!