Cinema Entertainment

சங்க தலைவர் பவதாரணியின் 80 லட்சத்தை ஆட்டைய போட்டுட்டான்..கொந்தளித்த ரத்த சொந்தம்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை இசையமைப்பாளர் இளையராஜாவாக தான் இருக்க முடியும். இளையராஜாவுக்கு முன்,பின் என தமிழ் சினிமாவை தரம் பிரிக்கும் அளவிற்கு ஒரு இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தார் இளையராஜா. இசையால் ஆறுதல் அளித்த இசையமைப்பாளர்களுக்கு உண்டான பிரச்சனையை இப்பதிவில் காணலாம்.




சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜாவின் சகோதரி மான பவதாரணி அவர்கள் புற்றுநோய் காரணமாக இயற்கை எய்தினார். தற்போது  பவதாரணியின் பெயரை பயன்படுத்தி அவரது கையெழுத்தை போட்டு 80 லட்சம் அளவிற்கு இசையமைப்பாளர் சங்கத்தில் மோசடி நடந்துள்ளது.

இதனால் மிகுந்த வேதனை அடைந்த இசை அமைப்பாளர் இளையராஜா நேரடியாக மீடியா முன்பு பேச முடியாமல்,அவரது தமையனான கங்கை அமரன் மூலம் இசையமைப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.




இசையமைப்பாளர் சங்கம்  அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பாக தோன்றி இசையை தொழிலாக கொண்ட நலிந்த தொழிலாளர்களுக்கு உதவும் வண்ணமும், அவரது கோரிக்கைகளை நிறைவு செய்யும் பொருட்டும் தொடங்கப்பட்டது. சங்கத்தின் கொள்கையின்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் கூட இரண்டு ஆண்டுகள் பதவியை நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக கடந்த 2019 இல் இருந்து தனுஷின் திருடா திருடி, விக்ரமின் கிங் முதலான படங்களுக்கு இசையமைத்த முன்னணி இசையமைப்பாளர் தீனா அவர்கள் இசையமைப்பாளர் சங்க தலைவராக 4 ஆண்டுகள் பதவி வகித்து வருகிறார். இவர் பதவியில் இருக்கும்போது தான் இசையமைப்பாளர் சங்கத்தில் இடம்பெற்றிருக்கும் தொழிலாளர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் பொருட்டு மோசடி நடந்துள்ளது.

இதனால் கோபமடைந்த இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், சபேஷ்முரளி முதலானோர் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தீனா அவர்கள் இனியும் இசையமைப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும்  80 லட்சத்தை ஆட்டைய போட்டுட்டான் என்றும் காட்டமாகவும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும் கூறி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!