Entertainment lifestyles News

உழைப்பின் மூலமே உயர்ந்து நிற்க்கும் சக்தி மசாலா நிறுவனம்

உழைப்பின் மூலமே உயர்ந்து இன்று சமையல் மசாலா பொருட்கள் தயாரிப்பாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனம்.

திரு. P.C.துரைசாமி அவரது துணைவியார் சாந்தி துரைசாமி ஆகியோர் தான் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

சம்பளம் கொடுத்தால் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள் என்ற முதலாளித்துவ சிந்தனையில்லாமல் தொழிலாளர்களின் குடும்ப நலனிலும் அக்கரை செலுத்துகிறார்கள்.




  • சமூக சேவை செய்வதற்காக, 1977ல் சக்தி தேவி தொண்டு அறக்கட்டளை துவக்கினார்கள்.

  • உடல் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க, சக்தி மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகிறார்கள்.

  • சக்தி மருத்துவமனையில் 10 சிறப்பு மருத்துவர்கள் வாயிலாக, 15 கிராமங்களில் உள்ள மக்களுக்கு, இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது

  • அதே போல் உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது என சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுபவர்களான கண், கை, கால் என உடல் உறுப்பில் குறைபாடு இருக்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு “உங்களால் முடியும். உழைப்புக்கு எதுவும் தடையில்லை” என அவர்களுக்கு வாழ்வியல் நம்பிக்கை கொடுத்து அப்படிப்பட்டவர்களை தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வைத்துள்ளார்கள் இந்த தொழிலதிபர்கள்.

  • கடந்த 30 வருடங்களாக ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து சுயமாக உழைப்பின் மூலம் தங்களின் குடும்ப வறுமையை அகற்றியுள்ளார்கள்.




இதற்காக இவர்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது.

எந்த இயற்கை பேரிடர் என்றாலும் தம்மால் முடிந்த தொகையை அரசுக்கு நன்கொடையாக தருவதற்கு ஓடோடி வருவர்.

அவர்களின் விளம்பர்ங்களில் கூட மழைநீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு என்று தான் இருக்கும். பொதுநலம் கருதி வெளியிடுவோர் “சக்தி மசாலா” என்று தான் முடியும்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்றும், தரம் எக்கேடு கெட்டால் என்ன, பணம் குவித்தால் போதும் என்ற மனநிலையில் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில்…

தரம் மட்டுமே தாரக மந்திரமாய், பொது தொண்டே தங்களின் அடையாளமாய் இருக்கும் சக்தி மசாலா தான் சிறந்த மசாலா-வாக உயர்ந்து நிற்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!