Entertainment News

paytm இனி கிடையாது… மொத்த செயல்பாடுகளையும் நிறுத்த ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி உத்தரவு…!

ரிசர்வ் வங்கி விதி மீறல்களில் ஈடுபட்டதால், Paytm நிறுவனத்தின் செயல்பாடுகளை மொத்தமாக நிறுத்த உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பண பரிவர்த்தனைகளை இணையதளம் வழியாக எளிதான முறையில் மேற்கொள்வதற்கு  உருவாக்கப்பட்ட paytm நிறுவனம் மக்களிடையே பிரபலமானது. இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளரை அறியக்கூடிய கேஒய்சி விதிமுறைக்கு அந்நிறுவனம் ஒத்துழைக்கவில்லை. எனவே, ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்திற்கு 5.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.




இந்நிலையில், புதிதாக வாடிக்கையாளர்களை இனிமேல் சேர்க்கக்கூடாது எனவும் டெபாசிட் மற்றும் டாப் அப் பணமும் பெறக்கூடாது என்று ரிசர்வ் வங்கியானது paytm நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களிடம் வாலட்களில் பணம் பெறுவது, என்சிஎம்சி கார்டு மூலமாக பணம் பெறுவது, வாடிக்கையாளர்களின் சேமிப்பு, நடப்பு, ஃபாஸ்டேக்  கணக்குகளிலிருந்து பணத்தை எடுப்பது போன்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பண பரிமாற்ற நடவடிக்கைகள் தவிர வேறு வகையான வங்கி செயல்பாடுகளில் paytm  ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!