Cinema Entertainment

திரையரங்குகளில் வெற்றி பெற்ற பிறகு OTTயில் வெளியாகும் படங்கள் .. எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சென்னை இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி என்பது கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்துக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார், ஆஹா, சோனி லைவ், ஜீ5, சன் நெக்ஸ்ட் என பல நிறுவனங்களும் ஓடிடி தளத்தை முன்னெடுத்துள்ளது. அதன்படி சினிமாவில் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரையில் நல்ல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன. திரையரங்குகளில் வெற்றி பெற்ற பிறகு OTTயில் வெளியாகும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் பல படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ள அவை என்னென்ன என்று பார்க்கலாம்,




கேப்டன் மில்லர்: நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் வெளியீடாக ரிலீசாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 12 அன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஜீ 5 |Zee5 ஓடிடி தளம் வாங்கியுள்ளதால், இப்படம் பிப்ரவரி 14 ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.




அயலான்: பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயின் அயலான் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டது. அயலான் படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்ட் ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த அறிவியல் புனைகதை திரைப்படம் பிப்ரவரி 16 முதல் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அயலான் பட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்ரி கிறிஸ்துமஸ்: இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து கத்ரினா கைஃப் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு இடையே ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தாலும் படத்தில் இருக்கும் சில மைனஸ் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதால்,இப்படம் பிப்ரவரி 14 ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.




குண்டூர் காரம்: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆல வைகுந்தபுரமுலோ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவரது இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள குண்டூர் காரம் படம் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ம் திரையரங்குகளில் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிப்ரவரி 9 அல்லது 16 ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

ஹனுமன்: ஹனுமன் திரைப்படம் , தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக வெளியானது.அனுமன் படம் வெளியான நாளிலிருந்தே அமோக வரவேற்பை பெற்றது. கட்டணம் செலுத்தி பிரீமியர் காட்சிகளையும், திரைப்பட நிகழ்ச்சிகளையும் பார்த்த பார்வையாளர்கள் அனுமன் படத்தை பாராட்டினார்கள். இந்த படம் பொங்கலுக்கு வெளியானாலும், மார்ச் 2ந் தேதி தான் இந்த படம் ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!