Cinema Entertainment

சேரனுக்கும் வைரமுத்துவுக்கும் வந்த சண்டை..

இயக்குநர் சேரனின் படங்கள் எப்பவும் ஓர் சமுதாயக் கருத்தையோ அல்லது மனிதனின் ஆழமான உணர்வுகளை சொல்லும் ஒரு ஜனரஞ்சகப் படமாகவோ அல்லது உணர்வினைப் பேசும் படமாகவோ இருக்கும். பாரதி கண்ணம்மா தலித் அரசியலைப் பேசும் படமாக இருந்து பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து ஹிட் ஆனது. அதேபோல் அதற்கு அடுத்து வந்த பொற்காலம் மாற்றுத் திறனாளிகளின் வலியைச் சொன்ன படம். வெற்றிக் கொடிகட்டு படமும் வெளிநாட்டு மோகத்தால் ஏமாறும் இளைஞர்களின் அரசியலைச் சொன்னது. இப்படி ஒவ்வொரு படத்தையும் செதுக்கி இன்று முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் சேரன்.




பெரும்பாலும் சேரனின் படங்களுக்கு கவிஞர் வைரமுத்து பாடலாசிரியராக இருந்திருக்கிறார். இவர்கள் கூட்டணி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளது. இருப்பினும் வெற்றிக் கொடிகட்டு படத்தில் இவர்கள் கூட்டணி உடைந்த சம்பவத்தை சேரன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.




வெற்றிக்கொடிகட்டு படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல்தான் ‘கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு‘ பாடல். அனுராதா ஸ்ரீராம் குரலில் தேவாவின் மயக்கும் இசையில் இப்பாடல் இன்றும் கருப்பு நிறம் கொண்டவர்களின் தேசிய கீதமாகத் திகழ்கிறது. காதலில் நிற வேறுபாடு கூடாது என்ற கருத்தை முன்னுறுத்தி எழுதப்பட்ட பாடல் அது. இந்தப் பாடலுக்காக தேவா முதலில் ஒரு மெட்டைப் போட்டாராம். அதற்கு வைரமுத்து கருப்புதான் எனக்குப் பிடிச்ச வர்ணம் என்று எழுதினராம்.

இந்த வரிகளில் உடன்பாடில்லாத சேரன் வைரமுத்துவிடம் வேறு வரிகள் எழுதச் சொல்லி கேட்டாராம். ஆனால் வைரமுத்துவோ இந்தப் பாடலை மாற்ற முடியாது என்று கூற வர்ணம் என்ற வார்த்தைக்குப் பதிலாக கலரு என்ற வார்த்தையைப் போடலாம் என்று கூற அதற்கு வைரமுத்துவோ தமிழ்ச் சொற்களைத் தான் பயன்படுத்துவேன் என்று கூறினாராம்.

ஆனால் அப்போது ஜீன்ஸ் படத்தில் வைரமுத்து எழுதிய ஹைர ஹைர ஹைரோப்பா என்ற பாடல் பிரபலமாக இருந்தது. சேரனோ இந்தப் பாடலில் மட்டும் 50Kg தாஜ்மகால் என எத்தனை ஆங்கிலச் சொற்கள் உள்ளது அதேபோல் இதற்கும் எழுதுமாறு கேட்டுக் கொள்ள வைரமுத்து முடியாது என்று ஒரு பாடலை மட்டும் எழுதி அப்படத்திலிருந்து விலகி விட்டாராம். பின் பா.விஜய் சேரனுடன் இணைந்த இந்தப்பாடலை முழுமை செய்தாராம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!