Entertainment lifestyles News Uncategorized

எலக்ட்ரிக் கார், பைக் வாங்கணுமா ? அப்போ மார்ச் 31-க்குள் வாங்கிக்கோங்க.

கனரக தொழில்துறை அமைச்சகம், ஃபாஸ்டர் இவி அடாப்ஷன் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிதி உதவியை ₹1,500 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மார்ச் 2024 வரையிலான நடப்பு ஆண்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டை ₹11,500 கோடியாக உயர்த்தியுள்ளது. இதில் கிட்டத்தட்ட ₹5,800 கோடி, ஏற்கனவே 13 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகன விற்பனை இந்த மானியத்தின் மூலம் நிலையான வளர்ச்சியை தந்துள்ளது. ஆனால் இனி இத்தகைய வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் குறைவு.




இந்தியாவில் புதிய ஹீரோ எலெக்ட்ரிக் பைக்குகள் - 2024 ஹீரோ எலெக்ட்ரிக் மாடல் விலை – டிரைவ்ஸ்பார்க்

மார்ச் 31, 2024க்குப் பிறகு எலக்ட்ரிக் கார்கள், எலக்ட்ரிக் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான அரசு மானியங்கள் நிறுத்தப்படும். FAME 2 திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிந்தால், மானியங்களும் நிறுத்தப்படும்.

சமீபத்திய பட்ஜெட்டில், 2024-25 நிதியாண்டுக்கு ₹2,670 கோடி ஒதுக்கப்பட்டது, இது இந்தியாவின் எலக்ட்ரிக் இயக்க மாற்றத்தை ஆதரிக்கும் FAME II நன்மைகளை நீட்டிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதை வைத்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பை தான் மத்திய அரசு விரிவாக்கம் செய்ய உள்ளது. ஜனவரி 2023 வரை, 2019 இல் அறிமுகம் செய்யப்பட்ட FAME II திட்டத்தின் கீழ் 11.9 லட்சம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், 1.4 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 17,000 எலக்ட்ரிக் கார்களுக்கு ₹5,790 கோடியை மானியமாக கொடுத்துள்ளது.

இந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 10,000 கோடி ரூபாய் நிதியில் பெரும் பகுதி எலக்ட்ரிக் பஸ்களுக்கும், 7400 எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு நிதியுதவி செய்யப்பட்டு உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் வேகமான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி (FAME) இந்தியா திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான மானியத்தை 40 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு சமீபத்தில் குறைத்துள்ளது.




இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மத்திய அரசால் பல மானியங்கள் வழங்கப்படுகிறது. அவை- பர்சேஸ் ஊக்கத்தொகை: எலக்ட்ரிக் வாகனத்தின் விலையில் பயனருக்கு நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது தள்ளுபடி கூப்பன்கள்: நிதி ஊக்கத்தொகை, அந்தத் தொகை பின்னர் திருப்பிச்

செலுத்தப்படும் வட்டி சலுகைகள்: கடன் பெறும் போது வட்டி விகிதத்தில் தள்ளுபடி வழங்கப்படும் சாலை வரி விலக்கு: எலக்ட்ரிக் வாகனம் வாங்கும் போது சாலை வரி தள்ளுபடி செய்யப்படுகிறது பதிவு கட்டண விலக்கு: புதிய எலக்ட்ரிக் வாகனம் வாங்கும் போது ஒரு முறை பதிவு கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது வருமான வரிச் சலுகை: தனிநபர் ஒருவர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகையின் மீதான விலக்காக வழங்கப்படுகிறது.

பிரிவு 80EEB இன் கீழ், எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் கடன் தொகைக்கு செலுத்தும் வட்டியில் ரூ. 1.5 லட்சம் வரை கணிசமான வரி விலக்கு பெறலாம். இது தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்து விருப்பங்களுக்கு மாறுவதற்கான நிதிச்சுமையை குறைக்கும்.

ஸ்கிராப்பிங் சலுகைகள்: பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பதிவை நீக்கினால் வழங்கப்படும்

மற்றவை: வட்டியில்லா கடன்கள், டாப்-அப் மானியங்கள், எலக்ட்ரிக் முச்சக்கர வண்டிகளுக்கான சிறப்புச் சலுகைகள் போன்ற சலுகைகளையும் பெறலாம்.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!